For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மான் வேட்டை.. நடிகர் சல்மான் கான், நடிகை தபு ஆஜராக ஜோத்பூர் ஹைகோர்ட் உத்தரவு

அரியவகை மானை வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கான் நடிகை தபு உள்ளிட்ட 5 பேர் நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என ஜோத்பூர் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ஜோத்பூர்: அரிய வகை மானை வேட்டையாடி வழக்கில் நடிகர் சல்மான் கான், நடிகை தபு உள்ளிட்ட 5 பேர் வரும் 25ஆம் தேதி ஆஜராக வேண்டும் என ஜோத்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சாட்சியங்களிடம் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தல்பேட் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நடிகர் சல்மான் கான் கடந்த 1998-ம் ஆண்டு 'ஹம் சாத் சாத் ஹெய்ன்' என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றிருந்தார். அப்போது கன்காணி என்ற கிராமத்தில் அவர் தடை செய்யப்பட்டுள்ள அரிய வகை கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 Actor Salman khan to appear in Jodpur High court on 25th for poaching case

அவருடன் படப்பிடிப்புக்கு சென்றிருந்த நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம், நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டவர்களும் இந்த வழக்கில் சிக்கினர். இதுதொடர்பான வழக்கு ராஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஹைகோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் சாட்சியங்களிடம் விசாரணை முடிந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி தல்பேட் சிங் உத்தரவிட்டுள்ளார். வரும் 25ஆம் தேதி 5 பேரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆணையிட்டார்.

English summary
Salman Khan, Saif Ali Khan, Sonali Bendre, Neelam and Tabu to appear before Jodpur court on January 25 for recording of statements in the 1998 black buck poaching case. Chief Judicial Magistrate gave the order after completion of examination of all the witnesses in the court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X