For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓட்டுக்காக குழந்தைகள் பாதுகாப்பை வியாபாரமாக்க வெட்கமாக இல்லையா?.. பிரகாஷ்ராஜ் சுளீர் #justasking

பத்மாவதி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய போது ஹரியாணாவில் பள்ளிக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஷால் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பத்மாவத் படத்துக்கு எதிராக பள்ளி குழந்தைகள் வாகனம் மீது தாக்குதல்- வீடியோ

    குர்கான்: வாக்கு வங்கி அரசியலுக்காக குழந்தைகளின் பாதுகாப்பை வியாபாரமாக்குவதற்கு வெட்கமாக இல்லையா என்று பத்மாவதிக்கு எதிரான போராட்டத்தின் போது பள்ளி வாகனம் தாக்கப்பட்டதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம், பத்மாவத்'. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே இந்த திரைப்படத்தில் ராணியாக நடித்துள்ளார். இதில் ராணியை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி மத்தியப் பிரதேசம், ஹரியாணாஸ ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில அரசுகள் தெரிவித்துவிட்டன.

    Actors Vishal and Prakash Raj condemns Karni sena activists attacks on School bus

    இதனிடையே, 'பத்மாவத்' திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது. பல்வேறு தடைகளை உடைத்து பத்மாவத்' திரைப்படம் இன்று இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவருகிறது. இதனை எதிர்த்து மத்தியப்பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

    அப்போது ஹரியாணா மாநிலம் குருகிராமில் பேருந்துக்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. மேலும் கார்னி சேனா அமைப்பினர் பள்ளி மாணவர்கள் என்றும் பாராமல் ஜிடி கோயங்கா பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்துவதும், குழந்தைகள் அலறுவதும் காண்போரை கதி கலங்க செய்துள்ளது. இதுகுறித்து நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஒன்றும் அறியாத பள்ளி குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய கார்னி சேனாவின் செயல் வெட்கமாக உள்ளது. எதை நோக்கி நாம் செல்கிறோம். அதுபோல் ஒன்று நடக்கக் கூட நம்மால் எப்படி கற்பனை செய்ய முடிகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதேபோல் நடிகர் பிரகாஷ் ராஜ் வழக்கம் போல் #justasking என்ற ஹேஷ்டேக் கொண்டு தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் பள்ளி பேருந்தை கார்னி சேனா அமைப்பு தாக்கியபோது என் நாட்டு குழந்தைகள் அச்சத்துடனும், அழுகையுடனும் பீதியில் உள்ளனர். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு ஒரு வழியில் செல்கிறது. எதிர்க்கட்சியோ ராஜதந்திர ரீதியில் வினையாற்றுகிறது. உங்களின் வாக்கு வங்கி அரசியலுக்காக குழந்தைகளின் பாதுகாப்பை வியாபாரமாக்குவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Karni Sena activists attacks school bus while protesting against Padmavati film in Haryana , Gurgaon.Actors Vishal and prakash Raj condemns the attack on children.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X