For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2021-இல் தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்கம்.. சமயம் பார்த்து ஆதிர் ரஞ்சனுக்கு தலைமை பதவி அளித்த காங்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை நியமித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்பிக்கள் குழுவின் தலைவராகவும் ரஞ்சன் இருந்து வருகிறார். இதற்கு முன்னர் மேற்கு வங்க மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோமன் மித்ரா காலமானார்.

Adhir Ranjan Chowdhury appointed West Bengal Congress chief

இவர் காலமானதை அடுத்து அந்த மாநிலத்திற்கு தலைவரை நியமிப்பது அவசியமானது. இதையடுத்து ரஞ்சனை சோனியா நியமித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், இந்த நேரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சோமன் மித்ரா ஆற்றிய சேவைகளை கட்சி நினைவுகூர்கிறது. அவரது இறப்பு அனைத்து காங்கிரஸ் கட்சியினரிடமும் ஒரு வெறுமையை ஏற்படுத்திச் சென்றுவிட்டது.

கன்னியாகுமரியில் களம் இறங்குகிறாரா குஷ்பு...? ஒன் இந்தியா தமிழிடம் அவர் கூறிய பிரத்யேக தகவல் இதோ.! கன்னியாகுமரியில் களம் இறங்குகிறாரா குஷ்பு...? ஒன் இந்தியா தமிழிடம் அவர் கூறிய பிரத்யேக தகவல் இதோ.!

அவருடைய அர்ப்பணிப்பு பணிகளுக்காக அவர் எப்போதும் நம் நினைவில் இருப்பார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்து வந்தவர் ரஞ்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Adhir Ranjan Chowdhury appointed as West Bengal Congress party's new president.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X