For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்- அதிமுக எம்பி

நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்று அதிமுக எம்பி ஜெயவர்தன் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும் நிலை உள்ளது என்று அதிமுக எம்பி ஜெயவர்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீது இன்று காலை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் உரையாற்றவுள்ளார்.

ADMK MP Jayavardhan speaks about Neet exam in Loksabha

இதன் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அதிமுக எம்பி ஜெயவர்தன் பேசினார். அப்போது மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசிடமிருந்து கச்ச தீவை மீட்க வேண்டும்.

இலங்கையில் நடந்த தமிழன படுகொலையை மத்திய அரசு வன்மையாக கண்டிக்க வேண்டும். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவது மக்கள் விருப்பத்திற்கு எதிரானது.

தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் நிதியானது குறைவாகவே கிடைக்கிறது. 2015 -ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த பேரிடர் , 2016-இல் நடந்த வர்தா புயல் ஆகிய பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதி கிடைக்கவில்லை.

அணைகள் பாதுகாப்பு மசோதாவை அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்த பிறகே சட்டமாக கொண்டு வர வேண்டும். தமிழகத்துக்கான பங்குத் தொகையை தர வேண்டும். ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார்.

English summary
MP Jayavardhan talks on no confidence motion about Neet exam will affect the village students. He also opposes to privatisation of Salem steel industry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X