For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனாதிபதி தேர்தலுக்கு பாஜகவுக்கு அதிமுக ஆதரவு?... தம்பிதுரை சொல்வது என்ன??

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளிப்பது குறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்க வேண்டும் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பாஜகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தீவிர ஆலோசனையில் உள்ளன.

இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோரின் பெயர்கள் முதல் சுஷ்மா ஸ்வராஜ் வரை ஏராளமான பெயர்கள் சுற்றிக் கொண்டுள்ளன.

பாஜக தீவிரம்

பாஜக தீவிரம்

நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு போதிய ஆதரவு உள்ள நிலையிலும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் எதிர்க்கட்சிகள் ஆதரிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று செயல்பட்ட வருகிது. அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்தான் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.

எத்தனை வாக்குகள்

எத்தனை வாக்குகள்

ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற மொத்தம் 5 லட்சத்து 49 ஆயிரத்து 442 வாக்குகள் தேவை. தற்போது பாஜகவிடம் மொத்தமாக 5,31,954 லட்சம் வாக்குகள் உள்ளன (கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து). எனவே கூடுதலாக தேவைப்படும் 17,488 வாக்குகளுக்காக அது இரு கட்சிகளை குறி வைத்துள்ளது.

அதிமுகவில்...

அதிமுகவில்...

அதிமுகவிடம் உள்ள 134 எம்.எல்.ஏக்கள் மூலம் வரும் வாக்குகள் 23,584 ஆகும். அதேபோல அதிமுக வசம் உள்ள 50 எம்.பிக்கள் (லோக்சபா + ராஜ்யசபா) மூலம் கிடைக்கும் வாக்குகளின் மதிப்பு 35,400 ஆகும். ஆக மொத்தம் 58,984 வாக்குகள் அதிமுகவிடம் உள்ளன. இதனால்தான் ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சரோஜா, காமராஜ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தாமல் பாஜக மௌனம் காத்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆதரவு

ஆதரவு

இந்நிலையில் பாஜக நிறுத்தும் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளருக்கு ஆதரவு தாருங்கள் என்று தம்பிதுரையை சந்தித்து அமைச்சர் வெங்கய்யா நாயுடு கேட்டுக் கொண்டார். அவர் பாஜக வேட்பாளர் தேர்வு குழுவின் உறுப்பினராவார். இதைத் தொடர்ந்து தம்பிதுரை செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து கட்சித் தலைமைதான் முடிவெடுக்கும் என்றார் தம்பிதுரை.

English summary
Loksabha Deputy Speaker says that in Presidential election ADMK will support to whom will be decided by Party's chief only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X