• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மோடி சர்க்காரில் மொத்தம் 20 கிரிமினல் அமைச்சர்கள்! 59 கோடீஸ்வரர்கள்!!

By Mathi
|

டெல்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள 66 பேரில் 20 பேர் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்பவர்கள்; 59 பேர் கோடீஸ்வரர்கள் என்கின்றன புள்ளி விவரங்கள்.

மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமையன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய அமைச்சர்களாக 21 பேர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

modi

இந்த 21 பேரில் 8 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்கிறது ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு (ADR). இது பற்றிய அந்த அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரம்:

  • கடந்த மே மாதம் 45 அமைச்சர்களுடன் மோடி அமைச்சரவை பதவியேற்றது. இதில் 12 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன.
  • ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இவர்களில் 8 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
  • 21 புதிய அமைச்சர்களில் 4 பேர் மீது மிகவும் கடுமையான கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
  • ஒட்டுமொத்தமாக மொத்தம் 11 அமைச்சர்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன.
  • ஆக்ரா தொகுதி எம்.பியான அமைச்சர் ராம்சங்கர் கதேரியா மீது மட்டும் 21 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
  • ராம்சங்கர் கதேரியா மீது பலாத்கார முயற்சி, மதநல்லிணக்கத்தை சீர்குலைத்தல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • மத்திய அமைச்சர்கள் ஹன்ஸ்ராஜ் மீது 11, பண்டாரு தத்தாத்ரேயா மீது 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • சாத்வி நிரஞ்சன் ஜோதி, கிரிராஜ்சிங் ஆகியோர் மீதும் வழக்குகள் உள்ளன.
  • அமைச்சர்கள் ராம்கிருபால் யாதவ், ராஜிவ் பிரதாப் ரூடி, முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் மீது தலா ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
  • மத்திய அமைச்சர்களில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையும் 40-ல் இருந்து 59 ஆக அதிகரித்துள்ளது.
  • அதாவது மத்திய அமைச்சர்களில் 92% பேர் கோடீஸ்வரர்கள்.
  • புதிய அமைச்சர்களில் ஒய்.எஸ். சவுத்ரி (ஆந்திரா)தான் ரூ189.69 கோடி சொத்து மதிப்புடையவர்.
  • சவுத்ரிக்கு அடுத்ததாக ஜெயந்த் சின்ஹா ரூ55.67 கோடி, மகேஷ் சர்மா ரூ 47.37 கோடி சொத்துகளை வைத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The number of tainted ministers in the government increased from 12 to 20 with Sunday's Cabinet expansion exercise according to the Association for Democratic Reforms (ADR). About 31% of the council of ministers has criminal charges pending against them with 8 out of the 21 new inductees facing criminal cases.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more