For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கள்ளக்காதல் கிரிமினல் குற்றமில்லை.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

இந்திய தண்டனை சட்டமான சட்ட பிரிவு 497ஐ நீக்ககோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கள்ளக்காதல் கிரிமினல் குற்றமில்லை.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு- வீடியோ

    டெல்லி: திருமண பந்தத்திற்கு வெளியே ஆணும், பெண்ணும் காதல் புரிவதும், பாலியல் உறவு மேற்கொள்வதும் கிரிமினல் குற்றச் செயல் இல்லை. தற்கொலைக்குத் தூண்டப்படாத வரை அது குற்றச் செயல் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    இந்திய தண்டனை சட்டமான சட்ட பிரிவு 497ஐ நீக்ககோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பை அளித்தது. ஒரு பெண்ணின் கணவர் அவருக்கு உரிமையாளர் அல்ல என்றும் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி நாரிமன், நீதிபதி சந்திரசூட், நீதிபதி கான்வில்கர், நீதிபதி இந்து மல்ஹோத்ரா அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

    சர்ச்சை

    சர்ச்சை

    இந்திய தண்டனை சட்ட பிரிவுகளில் சில சர்ச்சைக்கு உரிய தண்டனை சட்டங்கள் உள்ளது. அதில் ஒரு தண்டனை சட்டமான சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டு இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்னொரு சர்ச்சைக்கு உரிய சட்டமான இந்தியத் தண்டனைச் சட்டம்தான் இந்த 497. இதில்தான் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

    எப்படிப்பட்டது

    எப்படிப்பட்டது

    இந்தியத் தண்டனைச் சட்டம் 497 என்பது திருமண உறவுக்கு வெளியே பாலியல் உறவு கொள்வோருக்கு தண்டனை வழங்கும் சட்டமாகும். இதில் ஆண்களுக்குத்தான் தண்டனை உண்டு. பெண்களுக்குக் கிடையாது. ஒரு பெண் தனது கணவரின் அனுமதி அல்லாமல் வேறு ஒரு ஆணுடன் திருமணத்துக்கு அப்பாற்பட்டு உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று 497-ம் பிரிவு கூறுகிறது. ஆனால் இதில் அந்த பெண் தண்டிக்கப்பட மாட்டார். ஆண் மட்டுமே தண்டிக்கப்படுவார்.

    வன்புணர்வு குற்றம்

    வன்புணர்வு குற்றம்

    1860ல் இந்த சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் கைது செய்யப்படும் ஆண்கள், பாலியல் வன்புணர்வு என்ற குற்றத்தின் கீழ் தண்டனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இதற்கு 5 வருடம் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.

    ஏன் மனு தாக்கல்

    ஏன் மனு தாக்கல்

    இந்த சட்டப்பிரிவிற்கு எதிராக மூன்று காரணங்களுக்காக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டப்பிரிவின் கீழ் எப்படி ஒரு ஆண் மட்டுமே தண்டிக்கப்படலாம். இது பாலியல் சமத்துவத்திற்கு எதிரானது. இன்னொரு விஷயம், இதில் பெண்கள் ஆண்களின் சொத்துக்கள் போல பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்று அவர்களே தீர்மானிக்க வேண்டும். கடைசியாக பாலியல் உறவு என்பது இருவரின் உரிமை. இருவரும் முழு விருப்பத்துடன் பாலியல் உறவு கொள்ளும் போது, அதில் தவறில்லை.

    என்ன தீர்ப்பு

    என்ன தீர்ப்பு

    இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் அளித்துள்ளது. அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளனர். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இன்று இந்த சட்டப் பிரிவையே செல்லாது என்று கூறி விட்டது. திருமண பந்தத்திற்கு வெளியே ஆணும், பெண்ணும் காதல் புரிவதும், பாலியல் உறவு மேற்கொள்வதும் கிரிமினல் குற்றச் செயல் இல்லை என்றுள்ளது.

    நீக்கப்பட்டது

    நீக்கப்பட்டது

    கணவர் என்பவர் பெண்ணின் உரிமையாளர் அல்ல. இருவரும் சமமானவர்கள். திருமண பந்தத்திற்கு வெளியே உறவில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் இல்லை. தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை என்பது சட்டவிரோதமாகும். தகாத உறவால் யாரும் தற்கொலை செய்து கொள்ளாதவரை இதை குற்றச் செயலாக கருத முடியாது. இதனால் அரசியல் சட்டத்தின் 497வது பிரிவு சட்டவிரோதமானது என்று அதை நீக்கி உள்ளனர்.

    English summary
    Adultery Law: SC will give a verdict on Section 497.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X