For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்ற முடக்கத்தால் அத்வானி விரக்தி! ராஜினாமா செய்யலாமா என யோசிப்பதாக பரபர பேச்சு!

நாடாளுமன்றம் விவாதமே இல்லாமல் முடக்கப்படுவது குறித்து அத்வானி வேதனை தெரிவித்துள்ளார். எம்பி பதவியை ராஜினாமா

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவதால் விரக்தி அடைந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசாமல் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிடலாமா என யோசிப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முழுவது அமளிதான்.. சபை கூடுவதும் அமளி ஏற்படுவதும் ஒத்திவைக்கப்படுவதும்தான் வாடிக்கையாக இருந்து வருகிறது.

Advani upset over Parliament Adjourned

இன்றும் அமளியால் லோக்சபாவை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். இதில் அத்வானி கடும் அதிருப்தி அடைந்தார்.

அப்போது தமக்கு அருகே அமர்ந்திருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், பேசாமல் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிடலாமா என யோசிக்கிறேன் என அத்வானி கூறியிருக்கிறார். உடனே அவரை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சமாதானப்படுத்த முயற்சித்தார்.

இருந்தபோதும் நாடாளுமன்றம் விவாதமே இல்லாமல் கூடி கலைந்துபோவது என்பது நாடாளுமன்றத்தின் படுதோல்வியைத்தான் காட்டுவதாகவும் பாஜக எம்பிக்களிடம் அத்வானி வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

English summary
BJP veteran LK Advani BJP veteran LK Advani expressed distress today at the continuous disruption of parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X