For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கத்தார் விவகாரம்.. இந்தியர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு

கத்தாரில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: கத்தார் வாழ் இந்தியர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய தூதரத்தை தொடர்பு கொள்ள உதவி எண்களையும் அறிவித்துள்ளது.

தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் திங்களன்று துண்டித்துக் கொண்டன. கத்தாரின் வளைகுடா பகுதி அண்டை நாடுகள், கத்தாருடனான எல்லையையும் மூடி விட்டன.

Advisory for Indian Nationals in Qatar

கத்தார் உடனான வான்வழி மற்றும் கடல்வழி போக்குவரத்தை பஹ்ரைன் நிறுத்திவிட்டது. அமீரக விமான நிறுவனங்களும் கத்தாருக்கு அளித்த சேவையை நிறுத்திவிட்டது. இதேபோல் சவுதி அரேபியாவும் போக்குவரத்தை துண்டித்துவிட்டது.

இந்நிலையில் கத்தார் வாழ் இந்தியர்களின் உடமைக்கும் உயிருக்கும் ஆபத்து இல்லை என்று கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலும் பயணத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.

44255777, 55575086, 50536234, 55512810, 55532367, 66013225 என்ற எண்களில் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தை [email protected] என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Nothing is happening that suggests any threat to physical security. Please update yourself of the latest news and do not believe rumours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X