For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி.. பெங்களூரில் இருந்து மாற்றமில்லை.. மத்திய அரசு உறுதி

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வருடமும் 1996ம் ஆண்டு முதல் பெங்களூரில் நடந்து வருகிறது.

வடக்கு பெங்களூரின் புறநகர் பகுதியான யலகங்காவில்ல விமான கண்காட்சி நடைபெறும். உலகெங்கில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் இதை கண்டுகளிக்க வருவார்கள். சுற்றுலா பயணிகளும் குவிவார்கள்.

Aero India will be held in Bengaluru itself in Feb 2019

ஆனால், இம்முறை பெங்களூருக்கு பதிலாக வட இந்தியாவில் ஏதாவது ஒரு நகரத்தில் இந்த நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

குஜராத்தில் உளள நலியா ஏர்பேஸ் அல்லது, உத்திரப் பிரதேசத்தின் ஹிண்டன் ஏர்பேஸ் அல்லது, காசியாபாத், ஆக்ரா அல்லது லக்னோ ஆகிய ஏதாவது ஒரு நகரத்தில் நடத்துவது குறித்து பரிசீலனை செய்து வந்தது பிரதமர் அலுவலகம்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, இந்த வருடமும் இக்கண்காட்சி பெங்களூரில் நடைபெறும் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம்.

இதையடுத்து பிப்ரவரி 20 முதல் 24ம் தேதி வரை விமான கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

English summary
Amidst all the speculation and controversy that the Aero India may be shifted out, the Defence Ministry has said that the event would be held in Bengaluru itself. The Government on Saturday decided to hold the Aero India 2019 in Bengaluru from February 20-24. The five-day event will combine a major trade exhibition for the aerospace and defence industries with public air shows.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X