For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகில் அதிக குழந்தைகளை கொன்றுவந்த மலேரியாவை ஒழிக்க தடுப்பூசி... ஆப்பிரிக்காவில் அறிமுகம்

Google Oneindia Tamil News

லிலாங்வே: உலகில் முதல்முறையாக மலேரியா காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 2 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

உலகம் முழுவதும் கொசுவால் உருவாகும் மலேரியா காய்ச்சலுக்கு 4லட்சத்து 35 ஆயிரம் குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கிறார்கள். இந்நிலையில் அதில் 50 சதவீதம் பேர், ஆப்பிரிக்காவில் தான் உயிரிழக்கிறார்கள்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டும் 5 வயதுக்கு உள்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் ஆண்டுதோறும் மலேரியா காய்ச்சலுக்கு உயிரிழக்கிறார்கள்.

போலீஸ் நிலையம் முன்பாக ரவுடி மனைவி தீக்குளிக்க முயற்சி.. சென்னையில் பரபரப்பு போலீஸ் நிலையம் முன்பாக ரவுடி மனைவி தீக்குளிக்க முயற்சி.. சென்னையில் பரபரப்பு

2நிமிடத்துக்கு ஒரு குழந்தை

2நிமிடத்துக்கு ஒரு குழந்தை

அதாவது ஒவ்வொரு இரண்டு நிமிடத்துக்கு ஒரு குழந்தை உயிரிழக்கின்றன. இந்த நோய்க்கு தடுப்பு மருந்தைக் கண்டறிவதில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டின.

கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பு

இந்நிலையில் RTS,S என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்து செலுத்தப்பட்ட குழந்தைகளுக்கு மலேரியா தாக்கம் ஏற்படவில்லை என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

மலாவியில் தடுப்பூசி

மலாவியில் தடுப்பூசி

இதையடுத்து இந்த மருந்தினை கொடுத்து குழந்தைகள் இறப்பை தடுக்க ஆப்பிரிக்காவின் மலாவி அரசு நினைத்தது. இதன்படி மலாவி நாட்டில் மலேரியா இல்லாத மாலாவி என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி 2வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட்டது. மலாவி நாட்டின் இச்செயலுக்கு உலக சுகாதார நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைப்பு

சுகாதார அமைப்பு

கானா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் வரும் ஆண்டுகளில் மலேரியா தடுப்பூசி பயன்படுத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு 3லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசி போடப்பட உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி மூலம் உலகிலேயே அதிக குழந்தைகளை கொல்லும் மலேரியா நோய்க்கு முடிவு கட்ட முடியும் என நம்பப்படுகிறது.

English summary
the Government of Malawi’s launch of the world’s first malaria vaccine, which the vaccine, known as RTS,S, will be made available to children up to 2 years of age
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X