For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 வருடங்களுக்கு பின் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல்.. இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு!

காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் நடக்க உள்ளது.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் நடக்க உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தேர்தல்கள் தனி தனியாக நடக்கும். நகராட்சி அமைப்புகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்கள் தனியே நடக்கும். பாதுகாப்பு கருதி இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில் இந்த முறை இந்த தேர்தல் நான்கு கட்டமாக நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

After 2 years Jammu Kashmir seeing local body election today

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து இருக்கிறது. இதனால் தற்போது அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டாலும், தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இத்தனை நாட்களாக தேர்தல் நடத்தாமல் இருந்து வந்தது.

இன்று முதல் கட்டமாக 422 வார்டுகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. நகராட்சி, உள்ளாட்சி தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரம் அங்கு முதன்முறையாக பயன்படுத்தப்பட உள்ளது. இந்த தேர்தலை முக்கியமான கட்சிகள் எல்லாம் புறக்கணிக்கிறது.

முதல்வர் மெகபூபா முப்தியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவும் தேர்தலை புறக்கணிக்கிறார்கள். அதேபோல் காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களும் தேர்தலை புறக்கணிக்கவுள்ளது.

English summary
After 2 years Jammu Kashmir seeing local body election today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X