For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

46 நாட்களுக்கு பின் உயிர்பெற்ற மெகபூபா முப்தியின் ட்விட்டர் அக்கவுண்ட்

Google Oneindia Tamil News

Recommended Video

    சிறுவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா?..காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு-வீடியோ

    ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மெகபூபா முப்தியின் ட்விட்டர் அக்கவுண்ட் 46 நாட்களுக்குப் பின்னர் உயிர்பெற்றுள்ளது.

    ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு முன்னதாக அம்மாநில தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    After 46 days Mehbooba Mufti’s Twitter account becomes Active

    முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது, காஷ்மீர் தனிநாடு கோர ஆயுதப் போராட்டத்தை தூண்டியது உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

    இதேபோல் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைகளில் அடைக்கப்பட்ட அத்தனை பேரையும் மிகப் பெரும் சட்டப் போராட்டத்துக்குப் பின்னரே அவரது உறவினர்கள் சந்திக்க முடிந்தது.

    ஜம்மு காஷ்மீரில் சிறுவர்கள் கூட தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் மெகபூபா முப்தியின் ட்விட்டர் அக்கவுண்ட் இன்று 46 நாட்களுக்குப் பின்னர் இயக்கப்பட்டது. மெகபூபா முப்தியின் மகள் தாம் இந்த அக்கவுண்ட்டை இயக்குவதாக தெரிவித்திருக்கிறார். அதில் அடுத்தடுத்த பதிவுகளை வெளியிட்டு வருகிறார் மெகபூபா முப்தி மகள்.

    English summary
    After 46 Day, Jammu Kashmir Former Chief Minster Mehbooba Mufti's Twitter account became active by her daughter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X