For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவிங்க வேண்டாம், எங்க கிட்ட வாங்களேன்.. கங்குலிக்கு காங். வலைவீச்சு?

Google Oneindia Tamil News

After BJP, now Congress trying to woo Sourav Ganguly?
கொல்கத்தா: பாஜகவினர் வலை விரித்து அது சரிப்பட்டு வராத நிலையில் தற்போது முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு காங்கிரஸ் கட்சியும் வலை வீசியிருக்கிறது.

கங்குலியை பாஜகவுக்குள் இழுக்க அக்கட்சி தீவிரமாக முயற்சித்தது. நரேந்திர மோடி, வருண் காந்தி ஆகியோர் மூலம் இந்த முயற்சிகள் நடந்தன. மத்திய அமைச்சர் பதவி தருவதாகவும் கூட கங்குலிக்குக் கூறிப் பார்த்தனர். ஆனால் அதை கங்குலி நிராகரித்து விட்டார். அதை அவரே உறுதிப்படுத்தி விட்டார்.

இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி, கங்குலியை வளைக்கப் பார்ப்பதாக தெரிகிறது. மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டச்சார்யா கங்குலியை திடீரெனப் பார்த்துப் பேசியுள்ளார்.

இன்று காலை இந்த சந்திப்பு கொல்கத்தாவில் உள்ள கங்குலியின் வீட்டில் நடந்தது. இதுகுறித்து பட்டசார்யா கூறுகையில், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. அரசியல் காரணம் இதில் இல்லை. எந்த முக்கியத்துவமும் இல்லை. ஊகங்களுக்கு அவசியமும் இல்லை.

கங்குலி என்ன செய்ய விரும்புகிறாரோ அதை அவர் செய்வார். எந்த முடிவாக இருந்தாலும் அது அவரது முடிவாகவே இருக்கும். நான் எந்தத் திட்டத்தையும் அவரிடம் வைக்கவில்லை. இது ஒரு தனிப்பட்ட சந்தி்ப்பு என்றார் பட்டச்சார்யா.

ஆனால் காங்கிரஸ் கட்சி, கங்குலியை இழுக்க முயல்வதாகவே கூறப்படுகிறது. சச்சினுக்கு ராஜ்யசபா சீட் தந்தது போல, கங்குலிக்கும் ராஜ்யசபா அல்லது லோக்சபா தேர்தலில் வாய்ப்பளிக்க காங்கிரஸ் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

English summary
Soon after the Bharatiya Janata Party (BJP) offered former India cricket captain Sourav Ganguly a seat to contest the 2014 Lok Sabha polls, the West Bengal Congress chief also called on the cricketer at his residence here on Sunday. State Congress president Pradip Bhattacharya, however, described his meeting with Ganguly as a courtesy call, and refused to give it political colour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X