For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெங்களூரில் முதலை, அனகொண்டாவை அடுத்து சாலையோரம் பூத்துக்குலுங்கிய தாமரைப்பூக்கள்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் உள்ள பழைய ஏர்போர்ட் ரோட்டில் திடீர் என்று தாமரைகள் நிறைந்திருந்தது மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

பெங்களூர் நகர சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதை மாநகராட்சி கண்டுகொள்வது இல்லை என்ற புகார் உள்ளது. இந்நிலையில் உள்ளூர் அமைப்பு மற்றும் கலைஞர்கள் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்து சாலையை சரி செய்ய சாலையோரம் முதலை, அனகொண்டா பாம்பு ஆகியவற்றின் மாதிரிகளை செய்து போட்டனர்.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன குப்பைகள் அதிகம் உள்ள பழைய ஏர்போர்ட் ரோட்டோரம் உள்ளூர் கலைஞர் ஒருவர் தெர்மாகோலில் தாமரைகளை செய்து அவற்றுக்கு வண்ணம்தீட்டி போட்டார். வியாழக்கிழமை மதியம் அந்த வழியாக சென்றவர்கள் ரோட்டோரம் அழகிய தாமரைப்பூக்கள் இருந்ததை பார்த்து வியந்தனர். அருகில் சென்று பார்த்தபோது தான் அவை போலி பூக்கள் என்று தெரிய வந்தது.

நகரில் உள்ள சாலைகளை சரிசெய்யக் கோரி தான் தாமரைப்பூக்களை ரோட்டோரோம் வைத்துள்ளனர். நாளை பெங்களூர் மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் இவ்வாறு செய்துள்ளனர்.

பூங்கா நகரம் என்று பெயர் எடுத்த பெங்களூரில் குப்பை, மாசுப்பட்ட ஏரிகள், மோசமான சாலைகள், படுகேவலமான போக்குவரத்து நெரிசல் ஆகிய பிரச்சனைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bangalore based artist displayed thermocol made lotuses across a section of city's dirt-ridden old airport road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X