For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆம்பன் புயல் கடந்து சென்ற பின்.. புவனேஸ்வரில் பிங்க் மற்றும் ஊதா நிறத்திற்கு மாறிய வானம்!

Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: ஆம்பன் புயல் புதன்கிழமை மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா பயங்கர வேகத்தில் தாக்கி சென்றது. புயல் தாக்கி சென்ற பின்னர் , புவனேஸ்வர் நகரில் புயலின் அமைதியான தாக்கம் நிலவியது. பேரழிவு தரும் சூறாவளி நகரத்தை கடந்து சென்ற பிறகு, வானம் பிங்க் மற்றும் ஊதா நிறத்தில் காணப்பட்டது. இது பார்க்க ரம்மியமாக இருந்தது.

Recommended Video

    Cyclone Amphan Video Footage | Lightning | Flood

    ட்விட்டர் முழுவதும் வானத்தின் அழகிய சாயல்களின் புகைப்படங்களால் நிரப்பப்பட்டிருந்தது. மனிதகுலம் அம்பன் போன்ற பல புயல்களை தாக்கி வெற்றிகரமாக மீண்டிருப்பதாக பல நமபிக்கை தரும் பதிவுகளை டுவிட்டரில்.காண முடிந்தது

    பல தலைமுறையை பார்த்தாச்சு.. இப்படி ஒரு பெரும் புயலை பார்த்ததே இல்லை.. மேற்கு வங்க முதியவர்கள் ஷாக்!பல தலைமுறையை பார்த்தாச்சு.. இப்படி ஒரு பெரும் புயலை பார்த்ததே இல்லை.. மேற்கு வங்க முதியவர்கள் ஷாக்!

    After Cyclone Amphan Passes, Bhubaneswar Sky Turned Pink And Purple

    ஆம்பன் புயல் மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து ஜன்னல்களை உடைத்து, ஒடிசா மாநிலத்தை துவம்சம் செய்து வங்காளத்திற்குச் செல்லும்போது மிகப்பெரிய அழிவின் தடத்தை விட்டுச் சென்றது. ஆனால், சில மணிநேரம் நடந்த இந்த களோபரத்தை கண்ட புவனேஸ்வர் மக்கள் அதன்பின்பான அழகான வானத்தை கண்டது, நிச்சயமாக ஒரு இனிமையான காட்சியாக இருந்தது.

    After Cyclone Amphan Passes, Bhubaneswar Sky Turned Pink And Purple

    After Cyclone Amphan Passes, Bhubaneswar Sky Turned Pink And Purple

    After Cyclone Amphan Passes, Bhubaneswar Sky Turned Pink And Purple

    After Cyclone Amphan Passes, Bhubaneswar Sky Turned Pink And Purple

    After Cyclone Amphan Passes, Bhubaneswar Sky Turned Pink And Purple

    மேற்கு வங்கத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் மற்றும் ஒடிசாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புயலால் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டதாக தேசிய பேரிடர் பதிலளிப்பு படை (என்ஆர்டிஎஃப்) தலைவர் புதன்கிழமை தெரிவித்தார். வங்காளத்தில் ஆம்பன் புயல் பேரழிவால் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஆம்பன் புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் இன்று வான்வழி ஆய்வு நடத்தவுள்ளார்.
    வங்காள விரிகுடாவில் உருவான இரண்டாவது "சூப்பர் சூறாவளி" ஆம்பன் சூறாவளி ஆகும், 1999 ம் ஆண்டு ஒடிசா ஒரு சூப்பர் சூறாவளியால் தாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10,000 பேர் அந்த புயலால் இறந்தனர்.

    English summary
    Cyclone Amphan Odisha: After Cyclone Amphan Passes, Bhubaneswar Sky Turned Pink And Purple
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X