For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் வெற்றியை கொண்டாட மும்பையில் 2,000 கிலோ லட்டு குவித்து வைத்துள்ள பாஜக!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைப்பது உறுதி என தெரிவித்துள்ளதால் அந்த கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

மே 16ம் தேதி தேர்தல் முடிவு வெளியானதும் அதை ஆரவாரமாக கொண்டாடும் முயற்சியில் பாஜகவினர் இறங்கியுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை பொது மக்கள் காண வசதியாக பிரம்மாண்ட எல்சிடி திரை நிறுவப்பட்டுள்ளது.

2000 கிலோ லட்டு ஆர்டர்

After Exit Polls, BJP Stocking up on 2000 kgs of Laddoos in Mumbai

வரலாற்றுச் சிறப்பு மிக்க சிபி டேங்க் சந்திப்பில் பொதுமக்களுக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும் லட்டு, மற்றும் கேக் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 2000 கிலோ லட்டுகள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.

பட்டாசு, இனிப்புகள்

நரேந்திர மோடி பெரும்பான்மை பெற்றதாக முடிவுகள் உறுதி யானதும் உடனடியாக லட்டு விநியோகித்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடுவோம் என்று பாஜக மும்பை பிரிவு செய்தித்தொடர்பாளர் அடுல் ஷா கூறியுள்ளார். மோடியின் வெற்றிக்கு உழைத்த ஆர்எஸ்எஸ் தொண்டர் களும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கலாச்சாரம் லட்டு

லட்டு வழங்குவது இந்திய கலாச் சாரத்தின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் ஏதாவது கொண்டாட்டம் என்றால் லட்டு வழங்கு வதுதான் வழக்கம்.

பாஜக லட்டு

இந்த லட்டுகளை ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற அமைப்புகள் மூலமாக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் செய்வார்கள். எனவே லட்டு செய்ய ஆர்டர் கொடுத்துள்ளோம்.

வெற்றியின் மீது நம்பிக்கை

கொண்டாட்டத்தில் அவசரம் காட்டவில்லை. நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என எல்லோரும் நம்புகிறார்கள். எங்களுக்கும் அதில் நம்பிக்கை உள்ளது. பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பது உறுதி என்றும் ஷா தெரிவித்தார்.

English summary
Election results are yet to be announced but the BJP is already preparing for celebrations as most exit polls have given NDA a clear majority and Narendra Modi is expected to take over as the 15th Prime Minister of India. BJP workers are going to distribute 2000 kg laddoos at the historic CP tank crossing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X