For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகாவைத் தொடர்ந்து கோவாவிலும் பரபரப்பு.. திடீரென பாஜகவில் இணைந்த 10 காங். எம்எல்ஏக்கள்

Google Oneindia Tamil News

பனாஜி: கர்நாடகாவை தொடர்ந்து கோவாலும் காங்கிரசுக்கு அந்த கட்சியின் எம்எல்ஏக்கள் அதிரச்சி அளித்துள்ளனர். நேற்று இரவு திடீரென மொத்தம் உள்ள 15 எம்எல்ஏக்களில் 10பேர் பாஜகவில் இணைந்ததால் கோவாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் எம்எல்ஏக்கள் 10க்கும் மேற்பட்டோர் திடீரென ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணையப்போவதால் அங்கு ஆட்சி எந்த நேரமும் கவிழும் ஆபத்து உள்ளது.

After Karnataka, 10 Of 15 mlas Join BJP from Congress in goa

இந்த பிரச்னையில் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தளமும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த சூழலில் கோவா சட்டசபைக்கு மொத்தம் 36 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு பாஜக ஆட்சி நடந்து வருகிறது. பிரமோத் சாவத் முதல்வராக உள்ளார். அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 15 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது.

திடீரென நேற்று இரவு கோவாவில் மொத்தம் உள்ள 15 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 10 பேர் திடீரென பாஜகவில் இணைந்து கொண்டனர். இதன் மூலம் கோவா சட்டசபையில் பாஜக எம்ல்ஏக்களின் பலம் 27 ஆக உயர்ந்துள்ளது. 3ல் இரண்டு பங்கு உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்து இருப்பதால் அவர்கள் மீது கட்சி தாவல் நடவடிக்கையை காங்கிரஸ் கட்சியால் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு இணைந்த 10 எம்எல்ஏக்களில் எதிர்க்கட்சி தலைவரும் அடக்கம் என்பது தான் ஆச்சர்யமான தகவல்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை கேட்டு.. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய மேற்கு வங்க எம்பிஇலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை கேட்டு.. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய மேற்கு வங்க எம்பி

இது தொடர்பாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் உள்பட 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதன் மூலம் பாஜக பலம் 27 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் தங்களின் தொகுதி வளர்ச்சிக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சிக்காவும் பாஜகவில் இணைந்துள்ளனர். எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. என்றார். இவர்களை பாஜகவில் இணைந்ததை கோவா சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார்.

English summary
After Karnataka, 10 Of 15 mlas Join BJP from Congress , now nly five lawmakers in the goa state
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X