For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூடான் மீதும் கண் வைத்த சீனா.. அடுத்த ஆக்கிரமிப்பு.. . இந்தியாவுக்கு பாதகமாகும் பகீர் முயற்சி

Google Oneindia Tamil News

திம்பு: லடாக் மற்றும் தென்சீனக் கடலை தொடர்ந்து பூடானின் சில பகுதிகளை ஆக்கிரிமிக்க சீனா திட்டமிட்டுள்ளது. மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ராணுவ உள் கட்டமைப்பை உருவாக்கி எல்லை நிலையை சீனா மாற்ற முயற்சிக்க உள்ளதாகவும், வரவிருக்கும் 25 வது சுற்று எல்லை பேச்சுவார்த்தைகளில் இதை சாத்தியப்படுத்த சீனா திட்டமிடுவதாகவும் இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

இந்தியாவின் சிலிகுரி பகுதிக்க அடுத்தபடியாக பூட்டான் இருப்பதால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு மையமாக உள்ளது. ஆனால் சீனாவுடன் நடத்த உள்ள ச்சுவார்த்தையில் பூட்டான் மேற்கொள்ளப்போகும் எந்தவொரு பிராந்திய சமரசமும் இப்பகுதியில் இந்திய பாதுகாப்புக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

2017 ஆம் ஆண்டில் டோக்லாம் பீடபூமியில் 73 நாள் பூட்டான் எல்லையில் சீனாவிற்கு எதிராக இந்திய ராணுவம் படைகளை நிறுத்தி பூடானுக்கு உதவியது. ஆனாலும் சீன இராணுவம் இப்பகுதியில் உள்ள இரு நெருங்கிய நட்பு நாடுகளின் படைகளை சோதனை செய்வதை நிறுத்தவில்லை.

அன்று இரவு நடந்த சம்பவம்.. 1 மாதமாக கச்சிதமான பிளான் போட்ட இந்தியா.. சீனாவிற்கு ஷாக் தந்தது எப்படி?அன்று இரவு நடந்த சம்பவம்.. 1 மாதமாக கச்சிதமான பிளான் போட்ட இந்தியா.. சீனாவிற்கு ஷாக் தந்தது எப்படி?

உரிமை கொண்டாடுகிறது

உரிமை கொண்டாடுகிறது

இந்நிலையில் பூட்டானில் சீனா மேற்கு எல்லையில் 318 சதுர கி.மீ தூரத்தையும், மத்திய எல்லையில் 495 சதுர கி.மீ. தூரத்தையும் தனது பகுதி என்று உரிமை கோரி வருகிறது. அந்த பகுதியில் சாலைகள் அமைத்தல், இராணுவ உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் அத்துமீறி ஆக்கிரமிப்பு மற்றும் பகுதிகளை விட்டு வெளிறே மறுப்பு மூலம் சிறிய நாடான பூட்டான் ராணுவத்தை சீனா அச்சுறுத்துகிறது.

40 கிமீ நீளமுள்ள பகுதிகள்

40 கிமீ நீளமுள்ள பகுதிகள்

பூடான் மற்றும் இந்தியாவில் உள்ள தூதர்களின் கூற்றுப்படி, 2017 டோக்லாம் நிலைப்பாட்டிலிருந்து மாறி, சீன ராணுவம் மேற்கு பூட்டானின் சும்பி பள்ளத்தாக்கில் ஐந்து பகுதிகளுக்குள் ஊடுருவி உள்ளது, பூட்டானுக்குள் சுமார் 40 கி.மீ. நீளமுள்ள ஒரு புதிய எல்லைக்கு உரிமை கோரியுள்ளது. அங்கு முறையாக உள்கட்டமைப்பு, மேம்பட்ட பாதுகாப்பு, கட்டப்பட்ட சாலைகள், தடங்கள், துருப்புக்களின் இயக்கத்திற்கான ஹெலிபேடுகள் மற்றும் கடைசி மைல் வரை தளவாடங்களை உருவாக்கியுள்ளது.

சீனாவின் திட்டம்

சீனாவின் திட்டம்

ஆகஸ்ட் 13 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சீன ராணுவத்தினர் டோர்சா நுல்லாவின் (டோலோங் சூ) பிரதான ஆற்றை கடந்து தெற்கு டோக்லாமுக்குச் சென்று, பூட்டானியர்க்ளை ராஜா ராணி ஏரிக்கு அருகிலுள்ள இடத்தை காலி செய்யச் சொன்னது. அங்கு பூட்டானியர்கள் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். சீன ராணுவத்தின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள அடிப்படை யோசனை என்னவென்றால், இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளையும் சீனாவின் எல்லை ஜைம்பெரி ரிட்ஜில் உள்ள ஜியோமச்சென் வரை பூடானை உண்மையான சீரமைப்புக்கு ஒப்புக்கொள்ள வைக்க விரும்பகிறது,. 2017 ஆம் ஆண்டில் இந்திய ராணுவம் சீனாவிற்கு எதிராக நிறுத்தப்பட்டபோது இதைத்தான் செய்ய முயன்றது.

சீனாவிற்கு பதிலடி

சீனாவிற்கு பதிலடி

தேசிய பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, கண்காணிப்பு கேமராக்களை நிறுவுவதன் மூலம் சீனா வடக்கு டோக்லாமில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது, ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ தொழில்நுட்ப மேம்பாட்டை அங்கு சீன ராணுவம் தொடர்கிறது. டோர்சா நுல்லாவிற்கு தெற்கே சீன ராணுவம் வருவதைத் தடுப்பதற்காக, படைகளை குவிக்குமாறு பூடான் அரசு அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 2017 இல் டோக்லாமில் ஒப்புக் கொண்ட படை விலகளை நீக்க சீனா ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கு முயன்றால் பதிலடி கொடுக்க முடியும் என்று பூடான் அரசு நம்புகிறது.

English summary
After Ladakh and the South China Sea, the People’s Liberation Army (PLA) is poised to open another front against Bhutan. PLA has intruded into five areas of western Bhutan and laid claim to a new boundary that extends approximately 40 km inside Bhutan, to the east of Chumbi Valley.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X