For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத் வீதிகளில் பிரச்சாரம் செய்ய தடை... விமானத்தை நீர்நிலைகளில் இறக்க பிரதமர் மோடி முடிவு

குஜராத்தில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடிக்கு தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கதைகளை அவிழ்த்துவிடாதீர்கள்.. மோடியை நேரடியாக விமர்சிக்கும் பாஜக எம்.பி !- வீடியோ

    அகமதாபாத்: குஜராத்தில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து குஜராத்தின் கிராமங்களுக்குள் மோடி விமானம் மூலம் செல்ல இருக்கிறார். அவர் செல்லும் விமானம் அங்கு இருக்கும் நீர்நிலைகளில் தரையிறக்கப்பட உள்ளது.

    குஜராத் சட்டசபை தேர்தல் தற்போது நடந்து வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் தற்போது இரண்டாம்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில் பிரதமருக்கும், ராகுல் காந்திக்கும் குஜராத்தில் வீதி வீதியாக பிரச்சாரம் செய்ய தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது.

    After road show was cancelled, Modi takes to the sea in different way

    பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி போலீஸ் இந்த தடையை விதித்துள்ளது. இந்த நிலையில் குஜராத்தில் உள்ள சில கிராமங்களுக்கு செல்ல மோடி புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.

    அதன்படி சபர்மதி ஆறு வரை மோடி தனி விமானத்தில் செல்வார். அங்கு இருந்து நீரில் 'டேக் ஆப்' செய்யும் விமானத்தில் பயணிப்பார். இந்த விமானம் சபர்மதி ஆற்றில் இருந்து புறப்படும்.

    இந்த விமானம் 'தாரோய்' அணையில் இருக்கும் நீர்நிலை ஒன்றில் இறங்கும். இந்தியாவிலேயே முதல்முறை ஒரு பிரதமர் இது போன்ற வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

    பிரச்சாரத்திற்காக நீரில் 'டேக் ஆப்' செய்யும் விமானத்தில் பறக்கும் முதல் இந்திய பிரதமர் இவர்தான் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதுகுறித்த தகவலை அவர் டிவிட்டரில் வெளியிட்டார்.

    English summary
    Prime Minister Narendra Modi’s roadshow in Ahmedabad was cancelled. The PM has now opted for another plan that possibly could be a first. The PM would use a sea plane to take off from the Sabarmati river. The plane would land on the pond of the Dharoi dam from where Modi will proceed to the temple of Ambaji by road.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X