For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டைம்ஸ்நவ் தொடர்ந்து அர்ணாப் கோஸ்வாமிக்கு எதிராக இந்தியா டுடே வழக்கு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பிரபல பத்திரிகையாளர் அர்ணாப் கோஸ்வாமிக்கு எதிராக அவர் முன்பு பணியாற்றிய டைம்ஸ்நவ் சேனல் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மற்றொரு மீடியா குழுமமான இந்தியா டுடே வேறு ஒரு புகாருக்காக வழக்கு தொடர்ந்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமையான இன்று, இந்தியா டுடே குழு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தொடரும். Telecom Regulatory Authority of India (TRAI) விதிமுறைகளை மீறியதன் மூலம், அர்ணாப்பும் அவர் தொலைக்காட்சி சேனலான ரிபப்ளிக் டிவியும் தவறாக கணக்கு காட்டி நம்பர்-1 என பட்டம் சூட்டிக் கொண்டதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனால் அர்ணாப் கோஸ்வாமி சேனல் நிர்வாகத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

புது டிவி சேனல்

புது டிவி சேனல்

டைம்ஸ் நவ் டிவி சேனலில் பணியாற்றிய அர்ணாப் அங்கிருந்து விலகவலியுறுத்தப்பட்ட நிலையில் சமீபத்தில் ரிபப்ளிக் டிவி என்ற பெயரில் ஆங்கில செய்தி சேனல் தொடங்கினார்.

பழைய காட்சிகள்

பழைய காட்சிகள்

இந்த நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது பதிவு செய்த காட்சிகள், ஒலி நாடாவை தனது தொலைக்காட்சியில் அர்ணாப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

திருட்டு வழக்கு

திருட்டு வழக்கு

இதையடுத்து அர்ணாப் மற்றும் பெண் நிருபர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது டைம்ஸ் நவ் நிர்வாகம். திருட்டு, அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட வழக்கு பிரிவுகளின்கீழ ்வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா டுடே

இந்தியா டுடே

இந்த நிலையில், தற்போது இந்தியா டுடே குழுமமும் நீதிமன்றத்தை அணுகியுள்ளது. டிவி சேனல் தொடங்கிய 1 வாரத்திலேயே ரிபப்ளிக் டிவி டிஆர்பியில் முதலிடம் பிடித்ததாக பார்க் அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரம் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
After his former employees, another media group has dragged journalist Arnab Goswami to court. India Today has accused Arnab Goswami and his media venture Republic TV of malpractices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X