For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவுக்கு வழி காட்டும் தமிழகம்.. பெப்சி, கோக் விற்பனையை தவிர்க்கும் வணிகர்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தமிழகம் பாணியை பின்பற்றி தற்போது கேரளாவிலும் பெப்சி மற்றும் கோககோலா ஆகிய சர்வதேச குளிர்பானங்களை விற்பனை செய்வதை தவிர்க்க வணிகர் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

மார்ச் 14ம் தேதிக்கு பிறகு கேரளாவிலிருந்து கோக், பெப்சி மற்றும் அதன் துணை குளிர்பானங்கள் புழக்கத்திலிருந்து அகற்றப்பட உள்ளது. கேரள வணிகர் மற்றும் விவசாய சங்கம் இதற்கான அழைப்பை இன்றுவிடுத்தது.

After TN, Kerala traders' union calls for ban on Coke and Pepsi

நீர் ஆதாரங்களை அதிகப்படியாக உறிஞ்சி எடுப்பதால் இந்த நிறுவனங்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே கேரளா வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், விவசாயிகள் கொதிப்பு காரணமாக கோக் மற்றும் பெப்சிக்கு எதிராக வணிகர்கள் திரும்பியுள்ளனர். இதுகுறித்தது இனிமேல் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தப்போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தேவைப்பட்டால் அரசுடன் மட்டுமே பேச்சுவாரத்தை நடத்தப்படும் என்றும், அரசு தங்களுக்குத்தான் ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

English summary
Coke, Pepsi and their subsidiary cola drinks are all set to fizzle out in Kerala post March 14. The traders and farmers union in Kerala called for a statewide ban on the sale of cola drinks of multinational companies on Wednesday. Members of the association told media person in Thiruvananthapuram that retailers and wholesalers affiliated to the union will stop the sale of aerated drinks from March 14 in protest of alleged water exploitation by the companies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X