For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா!

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

    புவனேஷ்வர்: அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல கூடிய அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

    ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவு பாதுகாப்பு சோதனை நிலையத்தில் இருந்து காலை 9.53 மணிக்கு அக்னி-5 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.

    அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல கூடிய இந்த அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த சக்திவாய்ந்த ஏவுகணை பல சிறப்பம்சங்களை கொண்டது.

    5000 கிமீ தூரம்

    5000 கிமீ தூரம்

    அக்னி-5 ஏவுகணையானது 5,000 கிமீ தூரம் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை இன்று அதன் உச்சபட்ச தெலைவான 5,000 கி.மீ இலக்கை சென்றடையும் சோதனை செய்யப்பட்டுள்ளது.

    4 முறை சோதனை

    4 முறை சோதனை

    கடைசியாக அக்னி 5 ஏவுகணை கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சோதனை செய்யப்பட்டது. அக்னி ஏவுகணை இதற்கு முன்பு 4 முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.

    50 டன் எடை

    50 டன் எடை

    4 சோதனைகளும் வெற்றி பெற்றுள்ளது. இந்த அக்னி- 5 ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 50 டன் எடையும் கொண்டுள்ளது.

    5 அக்னி ஏவுகணைகள்

    5 அக்னி ஏவுகணைகள்

    தற்போது வரை இந்தியாவிடம் 5 அக்னி ஏவுகணைகள் உள்ளன. அதாவது அக்னி-1 ஏவுகணை 700 கிமீ தூரம் சென்று தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

    அக்னி ஏவுகணைகள் சோதனை

    அக்னி ஏவுகணைகள் சோதனை

    அக்னி-2 ஏவுகணை 2000 கிமீ தொலைவு சென்று இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதேபோல் அக்னி-3 ஏவுகணை 2500 கிமீ தொலைவும் அக்னி-4 ஏவுகணை 3500 கிமீ தொலைவும், அக்னி-5 ஏவுகணை 5000 கிமீ தொலைவும் செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Agni-V missile was test-fired from the Abdul Kalam Island defence test facility off the Odisha coast at 9:53 am. It is about 17-metre long and weighs over 50 tonnes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X