For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பசி கொடுமை?.. சாலைகளில் சிந்திய பால்.. தெருநாய்களுக்கு மத்தியில் குடுவையில் சேகரித்த 50 வயது நபர்!

Google Oneindia Tamil News

ஆக்ரா: ஆக்ராவில் சாலையில் சிந்திய பாலை கைகளால் அள்ளி குவளையில் சேகரிக்கும் நபரின் வீடியோவை பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்கிறது. அந்த நபர் அந்த பாலை அவருக்காக சேகரிக்கவில்லை என்றும் நாய்களுக்கு கொடுப்பதற்காகவே உணவை சேகரித்தார் என அங்கிருப்போர் தெரிவிக்கின்றனர்.

Recommended Video

    கீழே கொட்டிய பாலை எடுத்து சேமிக்கும் நபர்

    கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் கூலி வேலை செய்பவர்கள், சிறு குறு தொழில் செய்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் அன்றாட உணவிற்கே அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வட இந்தியாவில் சாமானிய மக்களின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இந்த நிலையில் ஆக்ராவின் ராம்பக் சவுராஹா பகுதியில் உள்ள சாலையில் சிந்திய பாலை வழித்தெடுத்து ஒரு நபர் தனது கையில் இருக்கும் குவளையில் சேகரித்தார்.

    மேலும் அவருடன் சேர்ந்து அந்த வழிந்த பாலை அங்கிருந்த தெருநாய்களும் குடித்தன. அதுகுறித்து அந்த நபர் கண்டுக்கொள்ளாத அளவுக்கு பசி மயக்கம் அவரை வாட்டுகிறது.

    ஆசை

    ஆசை

    அதே சமயம் அந்த நாய்களையும் அவர் விரட்டவில்லை. காரணம் நமக்கிருக்கும் பசி அந்த வாயில்லா ஜீவன்களுக்கும் இருக்கும் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ இவர் ஒரு சொட்டு பாலைக் கூட வீணாக்காமல் குவளையில் சேகரித்து அதை தனது குடும்பத்தினருக்கு கொடுக்கும் ஆசையில் அவர் செய்தது காண்போரை கண்கலங்க வைத்தது.

    நாய்கள்

    நாய்கள்

    இந்த சம்பவம் நடந்த இடம் தாஜ்மகாலிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இதுகுறித்து அங்கிருந்த காவல் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த சம்பவம் உண்மைத்தான் என தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என அந்த பகுதிமக்கள் கூறுகிறார்கள். அவருக்கு நாய்களுக்கு உணவளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும்.

    பால் சேகரிக்க

    பால் சேகரிக்க

    எனவே நாய்களுக்கு உணவளிக்கவே அவர் பாலை சேகரித்திருக்கலாம் என தெரிவித்தனர். அந்த நபருக்கு 50 வயதிருக்கும் என்றும் ராம்பாக் மேம்பாலத்தின் கீழ் வசித்து வருகிறார் என்றும் சில நேரங்களில் அவர் கோயில்களுக்கும் செல்வார் என அப்பகுதியினர் கூறுகிறார்கள். அவர் தனக்காக அந்த பாலை சேகரிக்கவில்லை.

    ஊரடங்கு அமல்

    நாய்களுக்கு கொடுப்பதற்காகவே அவர் பாலை சேகரித்ததாகவும் தெரிவித்தனர். கொரோனா பாதிப்பால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 3 -ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

    English summary
    Agra man collects up the split milk while stary dogs feed the same. Video leaves social media in tears.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X