For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன மாதிரி சமூகம்.. தற்கொலையை பேஸ்புக் லைவ் செய்த ஆக்ரா இளைஞர்.. தடுக்காமல் கண்டு ரசித்த 2750 பேர்

ஆக்ராவில் இளைஞர் தற்கொலை வாக்குமூலத்தை ஃபேஸ்புக்கில் லைவ்வாக பார்த்த ஒருவரும் தடுக்க முயற்சி செய்யவில்லை.

Google Oneindia Tamil News

ஆக்ரா: ஆக்ராவில் ராணுவத்தேர்தலில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக ஃபேஸ்புக்கில் லைவ்வாகப் பேசிய பின் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த தற்கொலை வாக்குமூலத்தைப் பார்த்த 2750 பேரில் ஒருவர் கூட அவருடைய தற்கொலையைத் தடுக்க முயற்சி செய்யவில்லை என்பது ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Agra youth suicide live confession in Facebook, no one save him

ஆக்ராவைச் சேர்ந்தவர் முன்னா குமார் (24). பட்டதாரியான இவருக்கு விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் ஆதர்சமாக இருந்துள்ளார். அதே போல, ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்துள்ளார். தொடர்ந்து ஐந்து முறை ராணுவத்தில் சேர்வர்தற்கான நுழைவுத் தேர்வை எழுதி தோல்வியடைந்துள்ளார்.

இதனால் விரக்தியில் இருந்த முன்னா குமார் நேற்று, புதன்கிழமை காலை தன்னுடைய ஃபேஸ்புக்கில் லைவ்வாக தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகப் பேசியுள்ளார். இதனை 2750 பேர் லைவ்வாகப் பார்த்துள்ளனர். அதற்குப் பிறகு அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இளைஞரின் தற்கொலை வாக்குமூலத்தை 2750 லைவ்வாக பார்த்தும் அவர்களில் ஒருவர் கூட அந்த இளைஞரை காப்பாற்ற வேண்டும் என்று இளைஞரின் பெற்றோரைத் தொடர்புகொண்டோ, காவல்துறையை தொடர்பு கொண்டோ எச்சரிக்கை செய்யவில்லை. அதற்கான எந்த முயற்சியும் எடுக்காதது சமூக ஊடகங்களின் நட்புகள் குறித்த கேள்விகளையும் ஆதங்கத்தையும் உருவாக்கியுள்ளது.

English summary
Agra youth Munna Kumar live streamed his suicide confession and hanged. this live video 2750 facebook users watched but nobody try to save him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X