For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயம், கல்வி, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

அதிக பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக பொருளதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயம், கல்வி, வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-2018ம் ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்துள்ளார்

இந்த அறிக்கையில் 2018- 19 ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரிச்சுமை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை

பொருளாதார ஆய்வறிக்கை

பிப்ரவரி 1ஆம் தேதி 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், வரி வசூல், சேவைத் துறை மற்றும் விவசாயத்துறையின் வளர்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 7 சதவிதத்தில் இருந்து 7.5 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கச்சா எண்ணெய் விலை அதிக அளவில் உயர்ந்திருப்பது பெரிய பிரச்சினை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு

கல்வி, வேலைவாய்ப்பு

அதிக பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி, வேலைவாய்ப்புக்கும், விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பட்ஜெட் 2018

பொது பட்ஜெட் 2018

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 - 19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

English summary
Agriculture, education, and employment will be areas of focus in the medium term, according to the Economic Survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X