For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்.. ப்ளீஸ் கோ ஆப்ரெட் பண்ணுங்க எதிர் கட்சிகளே... இது பாஜக நில

Google Oneindia Tamil News

டெல்லி: நாளை தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எ நாடாளுமன்ற திர்கட்சிகளின் ஒத்துழைப் பெறுவதற்காக இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 23ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Ahead of winter session Govt calls for all party meeting today

இது தொடர்பாக நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறுகையில், ஜிஎஸ்டி மசோதா காலத்தின் தேவை. இது கடந்த மழைகால கூட்டத்தொடரில் நிறைவேற்ற முடியாமல் போனது. எனவே இந்த மசோதா வரும் குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட வேண்டும். இதனை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காமல், தேசிய நலன் கருதி ஆதரிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள் கிறேன். சண்டையிட்டுக் கொள்ள பிற அரசியல் விவகாரங்கள் உள்ளன. இதில் வேண்டாம், என்றார்.

மழைகாலக் கூட்டத்தொடரின் போது எதிர்கட்சிகள் லலித் மோடி விவகாரம், வியாபம் முறைகேடு போன்ற விவகாரங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டன. நாளை குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் சகிப்புத்தன்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இது தொடர்பாக காங்கிரஸ், ஜனதாதள் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு நோட்டிஸ் அளித்துள்ளன.

இதையடுத்து, நாடாளுமன்ற அலுவல்களை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெற மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

English summary
With the winter session of Parliament beginning tomorrow Government has convened an all-party meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X