For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிட்டி 3.0 ரீ லோடட்.. ரோபோவின் சொல்படி பறக்க போகும் சந்திரயான் 2.. வியப்பூட்டும் விஷயம்!

சந்திரயான் 2 நிலவில் எங்கு இறங்க வேண்டும் என்பதை அதில் இருக்கும் ஏஐ ரோபோட் ஒன்றுதான் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Last 15 minutes are the most crucial time for Chandrayaan-2

    டெல்லி: சந்திரயான் 2 நிலவில் எங்கு இறங்க வேண்டும் என்பதை அதில் இருக்கும் ஏஐ ரோபோட் ஒன்றுதான் தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சந்திரயான் 2 நாளை அதிகாலை நிலவில் தரையிறங்குகிறது. நாளை அதிகாலை 1 மணியில் இருந்து 2 மணிக்குள் சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க தொடங்கும்.

    1.30 மணியில் இருந்து 2.30 மணிக்குள் விக்ரம் முழுமையாக கீழே இறங்கும். 5-6 மணிக்குள் சந்திராயன் 2ல் இருக்கும் பிரக்யான் நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும்.

    அந்த 15 நிமிடம்தான் முக்கியம்.. சந்திரயானுக்கு காத்திருக்கும் திக் நொடிகள்.. இஸ்ரோ சொன்ன சுவாரசியம்அந்த 15 நிமிடம்தான் முக்கியம்.. சந்திரயானுக்கு காத்திருக்கும் திக் நொடிகள்.. இஸ்ரோ சொன்ன சுவாரசியம்

    என்ன தூரம்

    என்ன தூரம்

    பொதுவாக நிலவிற்கு பூமிக்கும் இடையில் அதிக தூரம் இருப்பதால் தகவல் தொடர்பு நொடிக்கு நொடி நடக்காது. கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். ஆனால் சந்திரயான் 2 தரையிறங்கும் முக்கியமான நேரத்தில் இந்த கால விரயம் பெரிய பிரச்சனையை உள்ளாகும். இதனால் சந்திரயான் 2ல் இருக்கும் ரோபோ ஒன்று முக்கியமான பணிகளை தானாக கவனித்துக் கொள்ளும்.

    சந்திரயான் 2

    சந்திரயான் 2

    ஆம் இஸ்ரோவில் இருந்து சந்திரயான் 2 விற்கு தகவல்களை அனுப்பாமல் நேரடியாக இந்த ரோபோட் முக்கிய கட்டளைகளை சந்திரயான் 2விற்கு விதிக்கும். அதில் மிக முக்கியமானது நிலவில் எங்கு தரையிறங்க வேண்டும் என்பது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 2 தரையிறங்க போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

    இடத்தில் இறங்க வேண்டும்

    இடத்தில் இறங்க வேண்டும்

    ஆனால் தென் துருவத்தில் எந்த இடத்தில் சந்திரயான் 2 தரையிறங்கும் என்பதை இந்த ஏஐ தொழில்நுட்பம் மூலம் இயங்க கூடிய ரோபோட்தான் முடிவு செய்யும். சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரில்தான் இந்த ஏஐ ரோபோட் இருக்கிறது. இன்று நள்ளிரவில் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து விக்ரம் லேண்டர் நிலவில் கீழே இறங்கும்.

    எப்படி தேர்வு

    எப்படி தேர்வு

    லேண்டரில் இருக்கும் ஏஐ சென்சார்கள் மூலம் நிலவில் தென் பகுதியில் எங்கே இறங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படும். இந்த ஏஐ சென்சார் முழுக்க முழுக்க சுயமாக இந்த முடிவை எடுக்கும் திறன் கொண்டது. ஆம் இஸ்ரோ எங்கு இறங்க வேண்டும் என்பதை தீர்மானிக்காது.

    எப்படி செயல்படும்

    எப்படி செயல்படும்

    அதாவது சந்திரயான் 2வின் கண்டக்டர் போல இது செயல்படும். இது விசில் அடிக்கும் இடத்தில்தான் சந்திரயான் 2 இறங்கும். ஆனால் இது ரோபோ போல இருக்காது. கூகுள் அசிஸ்டன்ட், ஐ போனில் இருக்கும் சிரி அசிஸ்டன்ட் போல செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம் இறங்கும்

    விக்ரம் இறங்கும்

    இது முடிவெடுத்த பின் விக்ரம் கீழே இறங்கும். இதில் பாராசூட் இருக்காது. அதனால் எதிர் எஞ்சின்கள் மூலம் இதன் வேகம் குறைக்கப்படும். கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்த 1 கிமீ நேரத்திற்கும் குறைவான வேகத்தில் மெதுவாக நிலவில் இறங்கும். அதன்பின் பூமிக்கு இது ஒரு சிக்னலை அனுப்பும்.

    என்ன சூழ்நிலை

    என்ன சூழ்நிலை

    நிலவின் சூழ்நிலை எப்படி என்பதை ஆராய்ச்சி செய்து அதற்கு ஏற்றபடி இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக சந்திரயான் 2ல் இந்த ரோபோ வைக்கப்பட்டு இருக்கிறது. நாசா பயன்படுத்தும் சாப்ட் லேண்டிங் முறைகளிலும் இதேபோலத்தான் ரோபோட்கள் பயன்படுத்தபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    AI sensor will play a major role in Chandrayaan-2 landing in moon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X