For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம்

சிலை உடைப்பு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: சிலை உடைப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து அங்கிருந்த லெனின் சிலைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து இந்த நிலை தமிழகத்திலும் ஒருநாள் ஏற்படும் என்றும் அப்போது பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்றும் எச் ராஜா தெரிவித்திருந்தார்.

AIADMK Members protest against vandalism incidents

இதற்கு கண்டனங்கள் குவிந்தன. இந்நிலையில் அந்த பதிவை நீக்கியதோடு, அந்த பதிவை தான் போடவில்லை என்றும் தனது அட்மின் அனுமதியின்றி போட்டார் என்று இன்று ஒரு விளக்கத்தை எச் ராஜா கொடுத்திருந்தார்.

இதனிடையே திருப்பத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் பெரியார் சிலையை மர்ம நபர்கள் நேற்றிரவு உடைத்தனர். அவரது மூக்கு கண்ணாடி மற்றும் மூக்கை உடைத்தனர்.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது வெளியே வந்த அதிமுக எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

English summary
During the Budget session in Parliament, AIADMK members protest against the vandalism incidents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X