For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கே' என்பது பிரச்சனையா?: தற்கொலை செய்த எய்ம்ஸ் டாக்டர் ப்ரியாவின் மாமனார் பேட்டி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: தற்கொலை செய்து கொண்ட எய்ம்ஸ் டாக்டர் ப்ரியாவின் மாமனார் தனது ஓரினச்சேர்க்கையாளர் மகனுக்கு பரிந்து பேசியுள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர் ப்ரியா வேதி(31) தனது ஓரினச்சேர்க்கையாளர் கணவர் டாக்டர் கமல் வேதியின் கொடுமையை தாங்க முடியாமல் கடந்த 18ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன்பு அவர் தனது கணவர் செய்த கொடுமைகள் பற்றி ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து போலீசார் கமலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர் 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாமனார்

மாமனார்

டாக்டர் கமல் வேதியின் தந்தை பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் அவர் தனது ஓரினச்சேர்க்கையாளர் மகனுக்கு பரிந்து தான் பேசியுள்ளார்.

ஓரினச்சேர்க்கை

ஓரினச்சேர்க்கை

என் மகன் ஓரினச்சேர்க்கையாளர் என்பது மருமகள் புகார் தெரிவித்த பிறகே எனக்கு தெரியும். திருமண பந்தத்தை முறையாக செயல்பட வைத்திருக்க வேண்டியது பாரம்பரிய இந்திய பெண்ணான ப்ரியாவின் கடமை ஆகும் என்கிறார் கமலின் தந்தை.

சாதாரணம்

சாதாரணம்

ஓரினச்சேர்க்கை எல்லாம் இந்த காலத்தில் சர்வ சாதாரணமான விஷயம். இதற்கு போய் என் மருமகள் ஏன் வருத்தப்பட்டார் என தெரியவில்லை என்று பொறுப்பில்லாமல் பேசியுள்ளார் ப்ரியாவின் மாமனார்.

கமல்

கமல்

ஓரினச்சேர்க்கை பிரச்சனை பற்றி என் மகன் என்னிடம் தெரிவித்தது இல்லை. கமல் ப்ரியாவை பார்த்து பிடித்துப் போன பிறகே திருமணம் செய்து வைத்தோம் என்று டாக்டர் கமலின் தந்தை தெரிவித்துள்ளார்.

ப்ரியா

ப்ரியா

திருமணமாகி 5 ஆண்டுகளாக ப்ரியா கமலின் கொடுமைகளை தாங்கியுள்ளார். இனியும் தன்னால் கொடுமையை தாங்கவே முடியாது என்ற நிலைக்கு வந்து தற்கொலை செய்து கொண்டார். திருமண வாழ்வில் இவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தும் அவர் அது பற்றி வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்துள்ளார்.

English summary
Four days after an AIIMS female doctor committed suicide inside a hotel in Delhi, due to marital discord, her father-in-law defended his 'gay' son.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X