For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்-வீடியோ

    டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை குறைபாடு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 93.

    ஜூலை 11ம் தேதி வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். வாஜ்பாய் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

    AIIMS health bulletin expected at morning on Atal Bihari Vajpayee

    இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, மற்றொரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நிலை அதே போல தொடருகிறது. வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. உயிர் காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சிகிச்சை தொடர்கிறது. இவ்வாறு எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.

    ஆனால், மாலை 5.30 மணியளவில் மீண்டும் எய்ம்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி, ஆகஸ்ட் 16ம் தேதி இன்று மாலை 5.05 மணிக்கு மரணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 36 மணி நேரமாகத்தான் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகவும், உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், சிறந்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், வாஜ்பாயை இழக்க நேரிட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியிலுள்ள வாஜ்பாய் வீட்டை சுற்றிலும், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சாலை தடுப்புகள் போடப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    English summary
    AIIMS health bulletin expected at morning on Atal Bihari Vajpayee, says sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X