For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானத்தை சுற்றிவளைத்து தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூருவில் இருந்து இன்று மாலை ஏர் ஏசியா ஐ5- 585 என்ற விமானம் 179 பயணிகளுடன் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா புறப்பட்டு சென்றது.

அந்த விமானத்துக்கு மிரட்டல் வந்துள்ளதாக பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்துக்கு தகவல் வந்தது.

இதையடுத்து இன்று மாலை கொல்கத்தாவுக்கு வந்து தறையிரங்கிய ஏர் ஏசியா விமானத்தை கொல்கத்தா விமான நிலைய சிஐஎஸ்எப் பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றிவளைத்தனர்

Air Asia flight cordoned off by CISF at the Kolkata airport after threat call received at Bengaluru Airport

விமான நிலையத்தில் தனியாக நிறுத்தப்பட்ட ஏர் ஏசியா விமானத்தில் இருந்து 179 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் சிஐஎஸ்எப் வீரர்கள் விமானத்தில் ஏறி தீவிரமாக சோதனை நடத்தினர். சோதனை முடிவுகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த சோதனை காரணமாக கொல்கத்தா விமான நிலையம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

English summary
Air Asia I5 - 588 flight has been cordoned off by the CISF at the Kolkata airport after a threat call was received at the Bengaluru Airport. All 179 passengers have deboarded, aircraft is in isolation bay.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X