For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் விமானப் படை.. எல்லையில் போருக்கு தயாராகும் இந்தியா!

Google Oneindia Tamil News

Recommended Video

    Vayu Shakti 2019 | புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் விமானப் படை!

    ஜெய்ப்பூர்: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக விமான படை இந்திய- பாகிஸ்தான் எல்லையில் போருக்கு தயாராகி வருகிறது.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமாவில் 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 2500 வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 350 கிலோ வெடிப்பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதி கான்வாய் வாகனங்களின் மீது மோதி வெடிக்க செய்தார்.

    இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனால் இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்த நிலையில் தீவிரவாத தாக்குதலால் பெரும் இழப்பை இந்தியா சந்தித்துள்ளதால் பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    இரவு பகல்

    இரவு பகல்

    இந்த நிலையில் பாகிஸ்தானையொட்டி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் விமான படை சார்பில் மிகப் பெரிய போர் ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. இந்த ஒத்திகையில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என இரவு பகலாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.

    140 விமானங்கள்

    140 விமானங்கள்

    இந்த ஒத்திகையில் ஈடுபட்ட மொத்தம் 140 விமானங்களும் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடியவை. அத்துடன் தரையிலிருந்து வான் நோக்கி தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையும், வானில் இருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் சோதனைகளும் நிகழ்த்தப்பட்டது.

    விமான படை

    விமான படை

    ராணுவத் தளபதி பிபின் ராவத் மற்றும் உயர் அதிகாரிகளும் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். இதுகுறித்து விமான படை மார்ஷல் பிஎஸ் தோனோ கூறுகையில் அரசியல் தலைவர்கள் கூறியபடி தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கும் வகையில் விமான படை தயாராகி வருகிறது என்றார்.

    இந்தியா திட்டம்

    இந்தியா திட்டம்

    வாயு சக்தி என்ற ஒத்திகை நிகழ்ச்சி இரவு பகலாக நடைபெற்ற வந்த போதிலும், இந்த போர் ஒத்திகை புல்வாமா தாக்குதலுக்கா இல்லை பாகிஸ்தானுக்கா என்பதை குறிப்பிடவில்லை. இதை பார்க்கும் போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு பழித் தீர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்பது நன்றாக தெரிகிறது.

    English summary
    Air Force carried out a mega exercise involving 140 fighter jets and attack helicopters to avenge Pakistan based terrorost outfit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X