For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திக் திக்.. நடுவானில் தீர்ந்த எரிபொருள்.. வேலை செய்யாத கருவிகள்.. ஏர்இந்தியா விமானத்தில் பரபரப்பு!

டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற ஏர்இந்தியா விமானம் கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலை செய்யாத கருவிகளால் ஏர்இந்தியா விமானத்தில் பரபரப்பு!

    டெல்லி: டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற ஏர்இந்தியா விமானம் கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு இருக்கிறது.

    இதில் என்ன கோளாறு என்று கேட்டால், விமானத்தை தரையிறக்குவதில்தான் கோளாறு என்று கூறப்படுகிறது. ஏர் இந்தியாவின் போயிங் 777-300 விமானம்தான் இந்த பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளது. கடந்த செப்டம்பர் 11ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

    நேற்றுதான் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவமே மிகவும் திகிலூட்டக்கூடியதாக உள்ளது.

    அதிக தூரம்

    அதிக தூரம்

    ஏர் இந்தியாவின் போயிங் 777-300 விமானம் உலகில் அதிக தூரம் பயணிக்க கூடிய விமானங்களில் ஒன்று. சுமார் 15 மணி நேரம் ஒரே மூச்சில் இந்த விமானம் பறக்க கூடியது. 390 பயணிகளுக்கும் அதிகமான நபர்கள் இதில் செல்ல முடியும். டெல்லியில் இருந்து நியூயார்க் ஜான் எஃப் கென்னடி விமான நிலையம் வரை இந்த விமானம் செல்லும்.

    9 வருட அனுபவம்

    9 வருட அனுபவம்

    இந்த நிலையில் 9 வருடம் பழமையான ஏர் இந்தியாவின் போயிங் 777-300 விமானம் கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்கா சென்றுள்ளது. ஆனால் அங்கு சென்ற போதுதான் தெரிந்துள்ளது, விமானத்தில் பல முக்கிய கருவிகள் வேலை செய்யவில்லை என்று. அதாவது, விமான ஓடு பாதையுடன் விமானத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்புகள், காற்று அழுத்தத்தை கணிக்கும் அமைப்புகள், ஓடு தளத்தில் இருந்து வரும் சிக்னலுடன் தொடர்பு கொள்ளும் அமைப்புகள் என்று விமானத்தில் எல்லாமே செயலிழந்து போய் உள்ளது.

    என்ன செய்வது

    என்ன செய்வது

    அதேபோல், நியூயார்க்கில் அப்போது மோசமான வானிலை நிலவியதால், அந்த நேரத்தில் நேரடியாக விமானத்தை தரையிறக்க முடியாமல் தவித்து இருக்கிறார்கள் விமானிகள். எவ்வளவு தாழ்வாக சென்றாலும் மிக சரியாக விமானத்தை தரையிறக்க முடியாமல் தவித்து உள்ளார். மேலும், விமான ஓடு பாதையையும் சரியாக கணிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

    எரிபொருள் பிரச்சனை

    எரிபொருள் பிரச்சனை

    இந்த நிலையில்தான் விமானத்தில் இன்னொரு பிரச்சனை வந்துள்ளது. எரிபொருள் அதிக அளவில் தீர்ந்து, மிகவும் சொற்பமான அளவு எரிபொருள் மிச்சம் இருந்துள்ளது. ஆனால் எவ்வளவு திறமையான விமானியாக இருந்தாலும் இத்தனை பிரச்சனைகளை வைத்துக் கொண்டு, வானிலை பிரச்சனையையும் வைத்துக் கொண்டு விமானத்தை தரையிறக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் வேறு விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

    இடமாறினார்கள்

    இடமாறினார்கள்

    இது பெரிய பிரச்சனை ஆகும், என்பதால் அதே 370 பயணிகளுடன், அதே குறைவான எரிபொருளுடன் அருகில் இருந்து நியூஆர்க் (newark) விமான நிலையத்திற்கு சென்று இருக்கிறார்கள். அந்த எரிபொருளை வைத்துக் கொண்டு வேறு எங்கும் செல்ல முடியாது என்பதால் இந்த விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

    திறமையாக தரையிறக்கினார்கள்

    திறமையாக தரையிறக்கினார்கள்

    இந்த நிலையில் 3 நிமிடம் அங்கேயே சுற்றிவிட்டு, விமானத்தை எந்த கருவியின் உதவியும் இல்லாமல் குத்துமதிப்பாக ஓடு பாதையை கணித்து தரையிறக்கி உள்ளனர் விமானிகள். மிகவும் மோசமான நிலையில் இருந்த இந்த விமானம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதில் 370 பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

    English summary
    Air India Boeing 777-300 gets the bizarre problem: Nightmare to Pilots.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X