For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போயிங் 777 விமானங்களை அடிமாட்டு விலைக்கு விற்ற ஏர் இந்தியா! - அம்பலமாக்கும் வினோத் ராய்

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்ட போயிங் 777 விமானங்களை ஐந்தில் ஒரு பங்கு விலைக்கு ஏர் இந்தியா நிறுவனம் விற்றதாக வினோத் ராய் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 2004-ம் ஆண்டு எட்டு போயிங் 777 விமானங்களை வாங்கியது. ஒரு விமானத்தின் விலை ரூ 1400 கோடியாகும்.

Air India had to sell 777s at 1/5th price: Vinod Rai

இந்த எட்டு விமானங்களைக் கொண்டு, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டது. விமானங்கள் வாங்கப்பட்ட 5 ஆண்டுகளில், ஏர் இந்தியாவின் கடன் சுமையைக் குறைப்பதாகக் கூறி 5 விமானங்களை இட்டிஹாட் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது. மீதியுள்ள மூன்று விமானங்களையும் விரைவில் விற்கப் போகிறார்களாம்.

இதுகுறித்து இந்தியாவின் முன்னாள் கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் கூறுகையில், "இந்த விமானங்களை வாங்க பெரும் தொகையைச் செலுத்திய ஏர் இந்தியா, ஐந்து ஆண்டுகள் கழித்து, அடிமாட்டு விலைக்கு இட்டிஹாட் நிறுவனத்துக்கு விற்றுள்ளது. அதாவது விமானத்தின் உண்மையான விலையில் ஐந்தில் ஒரு பங்குக்கு, அதாவது ரூ 420 கோடிக்கு ஒவ்வொரு விமானத்தையும் விற்றுள்ளது," என்றார்.

ஏர் இந்தியா நிறுவனம் கிட்டத்தட்ட ரூ 44000 கோடி கடனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Cash-strapped Air India's purchase of Boeing 777 aircraft pushed it into such a state of financial unviability that within five years, the airline had to sell its aircraft to Etihad at one-fifth the original price, former Comptroller & Auditor General Vinod Rai told on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X