For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனியர் சிட்டிசன்களுக்கு 50% கட்டண சலுகை.. வயது வரம்பு 60ஆக குறைப்பு.. ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு!

சீனியர் சிட்டிசன்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என ஏர் இதியா நிறுவனம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: சீனியர் சிட்டிசன்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கட்டண சலுகையை பெறுவதற்கான வயது வரம்பையும் ஏர் இந்தியா குறைத்துள்ளது.

ஏர் இந்தியா விமானங்கள் ஏற்கனவே 63 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை வழங்கி வந்தது. இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 60ஆக குறைத்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.

Air India has reduced the senior citizens age limit to 60 from 63

மேலும் ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்வதற்கான கட்டணத்தையும் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீதமாக குறைத்துள்ளது. 60 -வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டுமே இந்த 50 சதவீத கட்டண சலுகையை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

English summary
Air India has reduced the senior citizens age limit to 60 from 63. The senior citizens will be getting 50% offer for ticket fair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X