For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர் இந்தியா தினத்தையொட்டி ரூ. 100க்கு டிக்கெட்- அதிரடி சலுகை அறிவிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் முதலிடத்தில் உள்ள விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா நிறுவனம் 100 ரூபாய் கட்டணத்தில் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய உள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனம், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததன் நினைவாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியை "ஏர் இந்தியா" தினமாக கொண்டாட உள்ளது.

இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு சலுகை விலையில் 100 ரூபாய் கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்ய உள்ளது.

Air India offers tickets for Rs 100

இது தொடர்பான ஏர் இந்தியாவின் அறிக்கையில், "ஏர் இந்தியா பயணிகளின் வசதிக்காக விழாக்காலத்தில் இச்சலுகை கட்டணத்தை தொடங்கியுள்ளது.

இச்சலுகை கட்டணத்தின் அடிப்படையில் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. ஏர் இந்தியா இணையதளம் மூலமாக இந்த டிக்கெட்டுகளைப் பெற முடியும்" என்று கூறியுள்ளது.

"ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை இந்த சலுகை டிக்கெட் விற்பனை செய்யப்படும்" என்றும் கூறப்பட்டுள்ளது.

முதல் முறையாக ஏர் இந்தியா தினத்தை கொண்டாட உள்ள இந்த நிறுவனம், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளது.

English summary
Air India will sell tickets for Rs 100 (taxes extra) for five days from Wednesday - which it will celebrate as Air India Day to commemorate the merger of erstwhile IndianAirlines and Air India on this day in 2007.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X