நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு.. டெல்லி பள்ளிகளுக்கு மேலும் 3 நாட்கள் லீவு
டெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசால் பொதுக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் பள்ளிகளுக்கான விடுமுறை மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தீபாவளிக்கு பின்னர் கடந்த ஒரு வாரமாக காற்றில் அதிக மாசு காணப்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகளும் வயதானவர்களும் மூச்சுவிட முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் காற்று மாசு நேற்று அதிகரித்து காணப்பட்டது. காற்று மாசுக்குறியீட்டு அளவு 428ல் இருந்து 825 ஆக இருந்தது. இது மிகவும் கடுமையான நிலை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த காற்று மாசு அடுத்த 3 நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் மேலும் 3 நாட்களுக்கு விடுமுறையை நீட்டித்துள்ளது அம்மாநில அரசு. டெல்லியில் கட்டுமானப் பணிகளை தொடங்கவும், கட்டடங்களை இடிக்கவும் 5 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.
பதன்பூர் அனல்மின்நிலையத்திலும் 10 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று பொதுப்பணித்துறையினர் சாலைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள் என்று குப்பைக் கிடங்குகளில் எரியும் தீ அணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள காற்று மாசு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!