For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ஜூலை 10வரை சிதம்பரத்தை கைது செய்ய கூடாது.. டெல்லி நீதிமன்றம் உத்தரவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் ப.சிதம்பரம் நேரில் ஆஜர்- வீடியோ

    டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜூலை 10ம் தேதிவரை சட்ட பாதுகாப்பு வழங்கியுள்ளது டெல்லி சிபிஐ நீதிமன்றம்.

    ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதில் ரூ.3,500 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.

    Aircel-Maxis case: Court gives P. Chidambaram protection from arrest by ED till 10 July

    இந்த வழக்கு தொடர்பாக அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திடமும் அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்ய தடை விதிக்கக் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் கடந்த வாரம் முறையிட்டிருந்தார். அதனை ஏற்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி, ஜூன் 5ம் தேதி வரை கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க அமலாக்க இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.

    இதற்கிடையில், விசாரணைக்காக இன்று ஆஜராக சிதம்பரத்துக்கு அமலாக்க பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், சிதம்பரம் கோரியிருந்த முன் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஜூலை 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    English summary
    Court gives P. Chidambaram protection from arrest by ED till 10 July in Aircel-Maxis case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X