For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி, மலேசியாவில் இருக்கும் மேக்சிஸ் நிறுவனத்திற்கு பங்குகளை விற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் 750 கோடி வரை பணப்பரிமாற்றம் நிகழ்ந்து இருக்கிறது என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னும் கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் முறையாக நிரூபிக்கப்படாமல் இருக்கிறது.

Aircel-Maxis Case: Enforcement directorate files chargesheet against Karthi Chidambaram

இந்த வழக்கில் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்களை முடக்கியது. இரண்டு முறை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பியது.

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.1.16 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டது. அதேபோல் கார்த்தி ஒருவாரம் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரிக்கபட்டார். தற்போது கார்த்தி மீது மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகை மீதான வாதங்கள் ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

English summary
Enforcement directorate files chargesheet against Karthi Chidambaram. Enforcement directorate took this action in Aircel -Maxis case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X