For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானிகளைத் தாக்கும் தோல் புற்று நோய் – விஞ்ஞானிகள் திடுக் தகவல்!

Google Oneindia Tamil News

டெல்லி: விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு தோல் புற்றுநோய் அபாயம் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களை விட இவர்களுக்கு இந்த அபாயம் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெலனோமா என்ற இந்த தோல் புற்றுநோயானது சாதாரண மக்களை விட விமானிகளுக்கும், விமான ஊழியர்களுக்கும்தான் சீக்கிரமே தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாம்.

புற ஊதாக் கதிர் ஆபத்து:

புற ஊதாக் கதிர் ஆபத்து:

அதிக உயரத்தில் விமானம் பறக்கும்போது இவர்களுக்கு அயனி கதிர்வீச்சும், புற ஊதாக் கதிர்வீச்சும் அதிக அளவில் தாக்குவதால் இந்த அபாயம் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகமான கதிர்வீச்சு:

அதிகமான கதிர்வீச்சு:

9000 மீட்டர் உயரத்தில் பறக்கும்போது தரையில் இருப்பதை விட 2 மடங்கு அதிக அளவில் புற ஊதாக் கதிர்வீச்சு அளவு இருக்கும் என்று கூறுகிறார் சான்பிரான்சிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிராயரும், ஆய்வுக் குழுத் தலைவருமான மார்ட்டினா சான்லோரென்சா.

2 லட்சம் பேரிடம் ஆய்வு:

2 லட்சம் பேரிடம் ஆய்வு:

இந்த பிரச்சினை தொடர்பாக 2 லட்சத்து 66 ஆயிரம் பேரிடம் 19 விதமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

புற்றுநோய் ஆபத்து:

புற்றுநோய் ஆபத்து:

இதில் விமானிகளுக்கு 2.22 சதவீத அதிக அபாயமும், விமான ஊழியர்களுக்கு 2.09 சதவீத அபாயமும் இருக்கிறதாம்.

English summary
Pilots and air crew face twice the risk of the deadly skin cancer Melanoma compared with the general population, says a study.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X