For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் 93 விமான நிலையங்கள்! வருகிறது சிக்கன ஏர்போர்ட்டுகள்!!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: அகமதாபாத், ஜெய்ப்பூர் உட்பட 93 விமான நிலையங்களால் இந்திய விமான பொறுப்பு குழு நஷ்டத்தை சந்தித்துவருகிறது. எனவே ஏசி வசதி கூட இல்லாத குறைந்த செலவுகொண்ட விமான நிலையங்களை உருவாக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

2012-13ம் நிதியாண்டில் இந்திய விமான பொறுப்பு குழு ரூ.1,547 கோடி நஷ்டத்தை சந்தித்தது. இதற்கு அகமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, அவுரங்காபாத், அமிருதசரஸ், வாரணாசி, போபால் உள்ளிட்ட விமான நிலையங்களும் முக்கிய காரணம்.

சதம் அடிக்க போகிறது

சதம் அடிக்க போகிறது

மொத்தம் 93 விமான நிலையங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகிறது, இந்திய விமான பொறுப்பு குழு.

பெங்களூரில் அதிக லாபம்

பெங்களூரில் அதிக லாபம்

அதே நேரம், டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் அதிக அளவுக்கு லாபத்தை இந்திய விமான பொறுப்பு குழுவிற்கு சம்பாதித்து கொடுத்து வருகின்றன. ஆனால் லாப தொகையை விட நஷ்டத்தொகை அதிகமாக உள்ளதால் நிகர லாபத்தை ஈட்ட முடியாமல் தவிக்கிறது இந்திய விமான பொறுப்பு குழு .

ஐந்து புதிய விமான நிலையங்கள்

ஐந்து புதிய விமான நிலையங்கள்

இதனிடையே விமான போக்குவரத்து அமைச்சரகத்துக்கு பிரதமர் அலுவலகம் ஒரு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது. அதில் இந்த நிதியாண்டில் புதிதாக 5 குறைந்த நிதி செலவுள்ள விமான நிலையங்களை அமைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்குள் இதுபோன்ற 50 விமான நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏசி இருக்காது

ஏசி இருக்காது

இந்த விமான நிலையங்களில் கன்வேயர் பெல்ட், வருகை லாங், குளிர்சாதன வசதிகள் இருக்காது. பயணிகளே தங்களது லக்கேஜுகளை சரிபார்த்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இதுபோன்ற குறைந்த செலவீன ஏர்போர்ட்டை தலா ரூ.50 கோடி செலவில் உருவாக்க இந்திய விமான பொறுப்பு குழு முடிவு செய்துள்ளது.

English summary
The Airports Authority of India has been incurring losses on 93 of its airports, even as the state-owned agency plans to build and operate 50 low-cost airports in the country in the next few years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X