For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசாமில் வெள்ள பாதிப்பை சீர்செய்ய உதவும் ஏர்டெல்!

Google Oneindia Tamil News

டெல்லி: கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அசாம் மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, அன்றாட வாழ்வாதாரம் முடங்கியதால், மக்கள் துயரத்தில் உள்ளனர். அசாமின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான, ஏர்டெல் தனது நெட்வொர்க் டீம்களுடன் சேர்ந்து, வெள்ள மீட்புப் பணிகளில் நேரங்காலம் பார்க்காமல் கூடுதல் பங்களிப்பு செய்துவருகிறது.

Airtel extends helping hand to flood-affected Assam

அசாமில் தற்போதைய நிலை:

வெள்ள நீர் பல இடங்களில் படிப்படியாக வடிந்து வருகிறது, இருந்தாலும், தற்போதைய சூழலில் அசாம் முழுக்க, 12 மாவட்டங்களில், 268 கிராமங்களில் வசிக்கும் மக்கள் சுமார் 1,65,763 பேர் இன்னமும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளனர். வெள்ளத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இதுவரை மொத்தம் 91 பேர் வெள்ளத்தால் பலியாகியுள்ளனர்.

தற்சமயம், மாநிலம் முழுக்க 615 வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 99,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தின் 12 மாவட்டங்களில் இந்த முகாம்கள் செயல்படுவதாக, பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI) குறிப்பிட்டுள்ளது. இதுதவிர, 5 மாவட்டங்களில் 49 வெள்ள நிவாரணம் வழங்கும் மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிரபலங்கள் பலரும், பொதுநல ஆர்வம் கொண்டவர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் வெள்ளம் பாதித்த அசாம் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Airtel extends helping hand to flood-affected Assam

தகவல்தொடர்பை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு:

அசாம் முழுக்க வெள்ளம் பாதித்ததால், ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். அப்படி வெளியேறிய பலரும் தங்களது பிரியமானவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் அசாம் முழுக்க தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படாமல் தடுப்பதை ஏர்டெல் உறுதி செய்துவருகிறது. இதற்கு, ஏர்டெல்லின் LTE - 900 தொழில்நுட்பம் மிக உதவிகரமாக உள்ளது. வெள்ள நீர் வீட்டிற்குள் வந்து நீங்கள் சிக்கிக் கொண்டாலும் தகவல் தொடர்பு பாதிக்காமல் இருக்க, இந்த தொழில்நுட்பம் பக்க பலமாக இருக்கும்.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் ஏர்டெல், அசாம் மக்களுக்கு உதவும் வகையில், அம்மாநிலம் முழுக்க உள்ள 30 மாவட்டங்களிலும், இலவச காலிங் மற்றும் டேட்டா சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இந்த பகுதிகளில் உள்ள போஸ்ட் பெய்டு மற்றும் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளும் தரப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பில் இணைந்திருங்கள்:

அசாம் வெள்ளத்தில் பாதித்த வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தகவல் தொடர்பில் இருக்க உதவும் வகையில் இலவச டாக் டைம் ஆஃபரை ஏர்டெல் அறிவித்துள்ளது. அத்துடன், தேவைக்கேற்ப 3G/4G வாடிக்கையாளர்களுக்கு 100 MB முதல் 5GB வரை இலவச டேட்டா சேவையும் தருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால், ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்ய கஷ்டப்பட தேவையில்லை. இதேபோல, போஸ்ட்-பெய்டு வாடிக்கையாளர்களுக்கு பில் கட்டும் தேதிக்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பார்தி ஏர்டெல்லின் வடகிழக்கு & அசாம் பிராந்திய சீஃப் ஆபரேட்டிங் ஆஃபிசர் (COO) சோவன் முகர்ஜி கூறுகையில், ''அசாமின் முன்னணி மொபைல் ஆபரேட்டர் மற்றும் பொறுப்புள்ள கார்ப்பரேட் சிட்டிசன் என்ற முறையில், தற்போதைய இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும், அரசு இயந்திரம் சார்பாக மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ள அரசு நிர்வாகத்தினருக்கும் உறுதுணையாக இருந்து, அவர்களின் தகவல்தொடர்பை பாதுகாக்கும் விதமாக நாங்கள் இந்த நடவடிக்கையை செயல்படுத்தியுள்ளோம்,'' என்றார்.

ஏர்டெல் - ஆபத்தில் உதவும் நண்பன்:

இந்திய நாடு இயற்கைப் பேரிடர்களை சந்திக்கும் போதெல்லாம், உதவிக்கரம் நீட்டுவதுதான் ஏர்டெல்லின் வழக்கம். சமீபத்தில் கூட, ஒடிசாவில் நிகழ்ந்த ஃபானி புயலால், உயிரிழப்புகள் முதற்கொண்டு ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டன. ஒடிசா மக்களுக்கு உதவும் வகையில், நிலைமையை சமாளிக்கும் வகையில் அப்போது அதற்கென போர்க்கால அடிப்படையில் தனிக்கட்டுப்பாட்டு அறைகளை ஏர்டெல் ஏற்படுத்தியது. நாட்டின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர் என்ற முறையில் தனது வாடிக்கையாளர்கள், அவர்களின் பிரியமானவர்களுடன் நெருக்கடியான நேரங்களில் தொடர்பில் இருக்க, ஏர்டெல் தேவையான உதவிகளை செய்து வருகிறது. இதன்மூலமாக, தனக்கான சமூகக் கடமையை ஏர்டெல் நிறைவேற்றுகிறது என்றால் அது மிகையல்ல.

English summary
Assam is currently reeling from the impact of devastating flood caused by relentless rains. With several districts still submerged, several families continue to be affected. As the leading mobile operator in Assam, Airtel and its network teams have been working overtime to contribute to flood relief efforts in the North-Eastern State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X