For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமராக பதவி வகிக்க லாயக்கில்லாதவர் ஜெயலலிதா- சொல்கிறார் மணிசங்கர அய்யர்

Google Oneindia Tamil News

டெல்லி : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரையும் விடுவி்ப்பது என்ற முடிவின் மூலம் பிரதமர் பதவிக்கு தான் லாயக்கில்லை என்பதை முதல்வர் ஜெயலலிதா நிரூபித்துள்ளார் என்று மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அவர்களது வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் அய்யர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இப்படிச் சொன்னார் அய்யர்.

அய்யர் பேச்சிலிருந்து...

பிரதமர் பதவிக்கு லாயக்கில்லை

பிரதமர் பதவிக்கு லாயக்கில்லை

தனது செயல்பாட்டின் மூலம் இந்த நாட்டின் பிரதமர் பதவியை வகிக்க தான் லாயக்கில்லை என்பதை ஜெயலலிதாவே வெளிப்படுத்தியுள்ளார்.

தேர்தல் லாபத்தை நோக்கில் கொண்டு

தேர்தல் லாபத்தை நோக்கில் கொண்டு

வரும் லோக்சபா தேர்தலில் பலன் பெறும் நோக்கில்தான் இப்படிச் செய்துள்ளார் ஜெயலலிதா.

ஆனால் தூக்குத் தண்டனை கூடாது

ஆனால் தூக்குத் தண்டனை கூடாது

அதேசமயம், நான் தூக்குத் தண்டனையை விரும்பவில்லை. அதை ரத்து செய்தால் அதற்காக நான் மகிழ்ச்சி அடைவேன்.

வாழ்நாள் முழுவதும் சிறைவாசம்

வாழ்நாள் முழுவதும் சிறைவாசம்

அதற்காக தவறு செய்தவர்களை வெளியில் விடுவதை நான் ஏற்க மாட்டேன். ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள கைதிகள் உள்பட அத்தண்டனை விதிக்கப்பட்ட அனைவருமே வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்றார் அய்யர்.

English summary
Congress leader Mani Shankar Aiyar saying that the move proved that she was "not capable of becoming the PM of the country". "Jayalalitha hopes to benefit from this decision in the next elections. But with this decision, she has proved that she is not capable of becoming the PM of the country,' Aiyar told reporters outside Parliament while at the same time stating that, "I will be happy if the death sentence is done away with".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X