For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி: இலக்கை தாக்கியது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Akash successfully test fired, India's air defence system gets a boost
புவனேஸ்வர்: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை இன்று ஒடிசா மாநிலம் சந்திப்பூர் பாலாசூர் கடற்கரை ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

60 கிலோ எடை அளவிளான வெடிபொருளை சுமந்து கொண்டு 25 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன்வாய்ந்த ஆகாஷ் ஏவுகணையின் தரம் மேம்படுத்தப்பட்டு அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் ஒடிசாவின் பாலாசோர் கடற்கரை அருகே உள்ள சந்திப்பூரில், இன்றும் ஆகாஷ் ஏவுகணை சோதனை நடைபெற்றது.

5 நிமிட இடைவெளியில் இருமுறை செலுத்தப்பட்ட இந்த ஏவுகணைகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கின. சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக ஏவுதள நிலைய இயக்குநர் எம்.கே.வி.பிரசாத் தெரிவித்துள்ளார்.

English summary
India's air defence capability received a major boost with the successful test firing of Akash, a indigenously-developed surface-to-air missile, from the Integrated Test Range in Chandipur, off the coast of Odisha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X