For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி முதல்வர் அகிலேஷ் அதிரடி... அமைச்சரவையில் 12 புதிய முகங்கள் சேர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவையை மாற்றி அமைத்துள்ளார். இன்று 12 புதுமுகங்கள் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச அரசில் 60 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலுக்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ஏற்கனவே முதல்வர் அகிலேஷ் தெரிவித்து இருந்தார்.

Akhilesh Yadav reshuffles UP cabinet, inducts 12 new faces

இந்நிலையில் அவர் கேபினட் அந்தஸ்தில் உள்ள 5 அமைச்சர்கள், 3 இணை அமைச்சர்களை அகிலேஷ் யாதவ் அதிரடியாக வியாழக்கிழமையன்று நீக்கினார். அது மட்டுமன்றி 9 இணை அமைச்சர்களின் பதவிகளையும் அகிலேஷ் யாதவ் பறித்தார்.

இந்நிலையில் அகிலேஷ் யாதவ் தமது அமைச்சரவையில் 12 புதிய முகங்களை இன்று சேர்த்துள்ளார். இணை அமைச்சர்களாக இருந்த சிலர் கேபினட் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.

இந்த அமைச்சரவை மாற்றம் 2017 சட்டசபை தேர்தலுக்கு கை கொடுக்கும் என்பது அகிலேஷின் நம்பிக்கை.

English summary
The 43-month-old Akhilesh Yadav government unveiled a new look ministry on Saturday with 12 fresh faces being inducted into the cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X