For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு தயாரா? கேட்கிறார் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ்!

By Mathi
Google Oneindia Tamil News

லக்னோ: மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு தயாரா? என்று உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சவால்விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தாத்ரி என்னும் கிராமத்தில் மாட்டிறைச்சியை சமைத்து உண்டதற்காக, 50 வயது முதியவர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

Akhilesh Yadav targets PM, dares him to ban beef exports

இந்நிலையில் லக்னோவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

மக்கள் தத்தமது விருப்பப்படி வாழ்வதற்கும், அவர்களுடைய உரிமைகளை மதிப்பதற்கும் நமது நாடும், நமது மதமும் அனுமதி அளிக்கின்றன.

மாட்டிறைச்சி ஏற்றுமதியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான முந்தைய அரசு ஆதரிப்பதாகச் சிலர் முன்பு குற்றம்சாட்டியிருந்தனர். தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள அவர்கள், மாட்டிறைச்சி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கலாமே?

இந்தியாவின் புகழை வெளிநாடுகளில் பரப்பி வருபவர்கள், அந்த நாடுகளில் வாழும் மக்கள் என்ன உண்கின்றனர் என்பதை அறிவார்களா? மாட்டிறைச்சி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்ய தயாரா?

இவ்வாறு அகிலேஷ் யாதவ் சவால்விடுத்துள்ளார்.

English summary
Targeting PM Modi, Uttar Pradesh chief minister Akhilesh Yadav said on Friday that those who spoke against the pink revolution should ban beef exports as they were now in power, and alleged that they wanted to disturb the secular ethos of the country by raising such issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X