For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் அல்கொய்தா அமைப்புக்கு புத்துயிரூட்ட வேண்டும்.. வீடியோவால் பரபரப்பு

இந்தியாவில் உள்ள அல்கொய்தா அமைப்புக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய துணை கண்டத்தில் அல்கொய்தா அமைப்புக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஜவாஹிரி வெளியிட்ட வீடியோவானது தீவிரவாத இயக்கத்தின் செய்தி பிரிவான அஷ்-ஷாஹாபில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதன் மூலம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Al-Qaeda makes fresh push to revive outfit in India

பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருக்கையில், துணை கண்டத்தில் அல்கொய்தா அமைப்பை தொடங்கியதில் எனது மருமகன் அபு துஜானா அல்-பாஷா முக்கிய பங்கு வகித்தார். அவர் தற்போது விமான தாக்குதலில் உயிரிழந்துவிட்டார். துணை கண்டத்தில் உள்ள அனைத்து ஜிஹாதி அமைப்புகளையும் அவர் ஒன்றிணைத்தார்.

ஜிஹாதிகளுக்கு எதிரானவர்களை எதிர்த்து நிற்க இதுதான் உரிய தருணம். துணை கண்டத்தில் பயிற்சியை தொடங்கி அதை முன்னெடுத்து செல்வது உள்ளிட்டவற்றில் முஜாஹிதீனுடன் அவருக்கு உள்ள பழைய நட்புறவுகள் கிடைக்க அல்லா அவருக்கு வழிகாட்டினார்.

முஜாஹிதீனிடையே அவர் பிரபலம் அடைந்ததால் பல்வேறு தீவிரவாத இயக்கங்களை ஒரு அமைப்பாக ஒன்றிணைத்தார். இஸ்லாமிக் எமிரேட் என்ற பெயரில் துணை கண்டத்தில் தொடங்கப்பட்ட அல்கொய்தா இயக்கத்துக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
The chief of the al-Qaeda Ayman al-Zawahari released a video clip stating that his son-in-law Abu Dujana al-Pasha was the driving force behind the setting up of the al-Qaeda in the sub-continent (AQIS).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X