For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிநீர் பைப்பில் வந்த மது.. 6000 லிட்டர் பீர்.. சரக்கை கொட்டியிருக்காங்க.. கேரளாவில் அதிசயம்

Google Oneindia Tamil News

திருச்சூர் : கேரளாவில் திருச்சூர் அருகே சாலக்குடியில் ஒரு அப்பார்ண்ட்மென்டில் உள்ள 18 வீடுகளுக்கு வரும் குழாயில் தண்ணீரைப் போல பீய்ச்சியபடி மதுபானம் வந்ததால் அந்த வீடுகளை சேர்ந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மது தண்ணீர் போல் வீட்டில் பைப்பை திறந்த உடன் பீய்ச்சி கொண்டு வரும் ஒரு வீடு இருந்தால் அந்த வீடு நிச்சயம் குடிமகன்களுக்கு சொர்க்கம் போல் தெரியும். இது கற்பனை அல்ல. நிஜமாகவே ஒரு அப்பார்ட்மெண்டில் குடிநீர் பைப்பை திறந்த 18 வீட்டின் மக்கள் மது தண்ணீரை போல் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கஞ்சா கருப்பு தாமிரபரணி படத்தில் நான் மட்டும் எம்எல்ஏ ஆனால் வீட்டில் ஒரே குழாயில் தண்ணீரையும், சாராயத்தையும் வரவைப்பேன் என்று பேசுவார். அப்படித்தான் குடிநீர் வந்த பைப்பில் சாராயம் வந்திருக்கிறது. மக்கள் அதை குடித்து விட்டு அதிர்ச்சி உறைந்து போயினர்.

குடிநீர் குழாய்

குடிநீர் குழாய்

ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சூரியின் சாலக்குடியில் உள்ள பேருந்து நிலையம் அருகே சாலமன் அவென்யூ குடியிருப்பில் வசிப்பர்கள் தங்கள் கட்டிடம் அருகே மது வாசனையை கவனித்தனர். அடுத்த நாள் குடிநீர் தொட்டில் தண்ணீரை நிரப்புவதற்காக மோட்டாரை ஆன் செய்துள்ளார்கள். அப்போது வீட்டில் இருந்த கிணற்றில் இருந்த தண்ணீர் தொட்டிக்கு சென்று பின்னர் வீட்டில் பைப்புகளுக்கு வந்துள்ளது. அந்த தண்ணீர் மதுவின் சுவையில் இருப்பதை கண்டு அவர்கள் பெரும் அதிரச்சி அடைந்தனர். அனைவரும் என்னவென்று பார்த்த போது அது மதுதான் என்பதை உறுதி செய்தனர்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் 18குடும்பங்களுக்கு தண்ணீரை ஏற்பாடு செய்து கொடுத்தனர். அத்துடன் என்ன காரணம் என்று விசாரித்த போது, இதற்கான மர்மம் விலகியது. திருச்சூரூ இரின்ஜலகுடாவைச் சேர்ந்த கலால் அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்பது தெரியவந்தது.

குழியில் மது குழியில் மது

குழியில் மது குழியில் மது

அந்த பகுதியில் 6 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக பார் ஒன்று செயல்பட்டு வந்தது. அதை மூடி சீல் வைத்த அதிகாரிகள் அங்கிருந்த 6000 லிட்டர் பீர் மற்றும் மதுவை அப்பார்ட்மெண்டின் கிணற்றில் அருகே குழி தோண்டி ஊற்றிவிட்டு மூடிவிட்டு சென்றுவிட்டார்கள். அதுதான் இப்போது கிணற்றில் கலந்து வீடுகளுக்கு வந்திருக்கிறது.

மாற்று ஏற்பாடு

மாற்று ஏற்பாடு

இதனால் அந்த 18 வீட்டில் வாழும் மக்களுக்கும் எப்போது இந்த பிரச்சனை சரியாகும் என்று எதிர்நோக்கி உள்ளனர். இதற்கிடையே 18 குடும்பங்களுக்கு தண்ணீரை ஏற்பாடு அளிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.அத்துடன் இந்த பிரச்சனைக்கு காரணமான கலால் அதிகாரிள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

English summary
Alcohol flows out of water taps in Kerala , families shocked in Chalakkudy. culprits were identified as a bunch of excise officials from Irinjalakuda, who callously disposed off 6000 litres of beer and other spirits into a pit next to the apartment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X