For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிஏஏ.. என்ஆர்சிக்கு எதிரான அனைத்து விளம்பரத்தை உடனே நிறுத்துங்க.. மம்தாவுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

கொல்கத்தா: குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) ஆகியவை மேற்குவங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று சொல்வதையும், விளம்பரம் செய்வதையும் உடனே மேற்கு வங்க அரசு நிறுத்த வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) ஆகிவற்றுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

All ads should Stop that say West Bengal will not implement CAA and nrc: Court To Bengal Government

இந்த சட்டங்களை மேற்குவங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில மக்களிடம் மம்தா பானார்ஜி உறுதி அளித்து வருகிறார். அத்துடன் குடியுரிமை சட்டத்துக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேரணி நடத்தி எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநில உயர்நீதிமன்றத்தில் (கொலகத்தா உயர்நீதிமன்றம்) அம்மாநில முதல்வர் மம்தாவின் அறிவிப்புக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) ஆகியவை மேற்குவங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று சொல்வதையும், விளம்பரம் செய்வதையும் உடனே மேற்கு வங்க அரசு நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

English summary
All ads that say West Bengal will not implement the amended citizenship law and the citizens' list should be taken off air, the Calcutta High Court told the government led by Chief Minister Mamata Banerjee today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X